
தனது பிறந்த தினமான ஜூன் 3-ம் தேதி முதல் அரசியலுக்கும் அதனோடு சேர்த்து இலக்கியத்துக்கும் முழுக்குப் போடுகிறார் மு.கருணாநிதி. இதற்கான அறிவிப்பும் 3-ம் தேதியன்றே வெளியாகவிருக்கிறது.
“தலைவா! இலக்கியப் பணியை மட்டும் தயவு செய்து விட்டுவிடவேண்டாம்” என்று தொண்டர்கள் யாராவது உண்ணாவிரதம் இருந்தாலோ, தீக்குளிக்க முயன்றாலோ, இலக்கியத்தை மட்டும் தொடர்வது என முடிவு செய்வார் என்று எதிர்பார்க்கபடுகிறது.
கட்சியையும், கனிமொழியையும் காப்பாற்றும் பொறுப்பு மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க ஆட்சியிலிருக்கும் ஐந்து ஆண்டு காலமும் அழகிரியை அடக்கி வாசிக்கச் சொல்லி உத்தரவிடப்பட்டிருக்கிறது.
வை.கோ.வை மீண்டும் கட்சிக்கு அழைத்து வருவது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாக தெரிகிறது.
மாறன் குரூப் குறித்த தகவல்கள் ஏதும் தற்போதைக்கு இல்லை.
3 comments:
நீங்க சொன்னதுலே ஒண்ணுகூட நடக்கலியே தோழர்? :-(
‘இதற்கான அறிவிப்பும் 3-ம் தேதியன்றே வெளியாகவிருக்கிறது’ என்பதற்கு பதிலாக 30-ம் தேதி என்று தவறுதலாக வெளியாகியிருக்கிறது. அதுதான் தறு.
மற்றபடி 3-ம் தேதியோடு முழுக்குப் போடவிருப்பதாக உங்கள் தலைவர் முடிவெடுத்தது உண்மை.
ஆனால், நான் சொன்னது ஒண்ணுகூட நடக்கலையே என்பதைவிட, உங்க தலைவர் சொன்னதுகூடத்தான் நிறைய நடக்கவில்லை.
அரசியலைவிட்டு விலகப்போகிறேன் என்று இதுவரை நான்கு முறை அறிவித்திருக்கிறார் கருணாநிதி. செய்தாரா?
பிறந்தநாளன்று கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமென்று தீவிரமாக நம்பியது தி.மு.க. ஆனால், ஜாமீன் கிடைக்கப்போவதில்லை என்பது 2-ம் தேதி மாலையே தெரிந்துவிட்டது. 3-ம் தேதிக்கான கோர்ட்டு ஆவனங்களில் கனிமொழி சம்பந்தப்பட்ட கோப்புகள் எதுவும் காணப்படவில்லை என்பதை முன்னரே தெரிந்துகொண்டார்கள்.
கனிமொழியைக்கூட வெளியே எடுக்க இயலாத அரசியல் சூழ்நிலையில், கட்சியினர் சோர்ந்துவிடக்கூடாது என்பதற்காக தி.மு.க தலைவர் தன்னுடைய முடிவை தள்ளி வைத்திருக்கக்கூடும்.
எனவே, ஒன்றுகூட நடக்கவில்லை என்பதற்காக சொன்ன செய்தி பொய்யாகிவிடாது. அப்படி ஒரு முடிவு எடுத்திருந்தது உண்மை.
//ஒன்றுகூட நடக்கவில்லை என்பதற்காக சொன்ன செய்தி பொய்யாகிவிடாது.//
:-)))))))))))))))
Post a Comment