
கைக்குட்டையை போர்த்திக்கொண்டு கம்மென்று நடக்கிறது கால்கள்.
''ஒரே நாத்தம்!'' உள்ளிருந்து வருகிறது வார்த்தைகள்.
''இவனுங்க வாயை விட இந்த காவா நாத்தம் மேல்றா!''
சொல்லிச் சிரித்தபடி தொடர்கிறது வேலை.
ஏரி குளங்களில் புல்டோசர் - பொக்லைன் இயந்திரங்கள்
உழவர்கள் கூலியை உறிஞ்சிக் குடிக்கிறது.
கையை நீட்டினால் தண்ணீர் கொட்டுகிறது
துடைக்க வேண்டாம் துண்டுக்கு பதில் சூடான காற்று.
எதெதற்கோ இயந்திரம் இருக்கு இதற்கொரு கருவி இல்லை
இது சாக்கடைச் சமுதாயம். உண்மைதானே?
5 comments:
பாலா,
உங்கள் கருத்துக்களில் சிறிது உண்மை இருக்கத்தான் செய்கிறது. இந்த வீடியோவை பாருங்க இந்தியாவின் மீது நம்பிக்கை வையுங்க அது முன்னேறும் என்று.
http://biascope.blogspot.com/
வாங்க பாலா ! அப்படியே "Flickr" ல் இருக்கும் படங்களை இங்கேயும் இடலாமே .
சத்தியமான சவுக்கடி வார்த்தைகள் கடைசி வரி! :-(
பாலச்சந்திரன்,
நல்ல யதார்த்தமான வாழ்வை பதிவிலும், படங்களிலும் அறியமுடிகிறது. தமிழ்மணம் திரட்டியில் சேர்த்தால் இன்னும் பலர் படிக்க வாய்ப்பாக இருக்குமே.
nice articles. India will develop when it is true to near countries like Sri Lanka and Nepal. It has 'irrattai nakku' diplomacy with sri lankan tamils and dalai lama. leave it. Valarasakavendum enpathai vdutthu nallarasakungal.
Better use normal than italic. it is easy to read.
Post a Comment