Friday, December 31, 2010

ஹெராயின் கடத்தினாரா ராகுல்காந்தி! சு.சாமி பரபர...!


கடந்த திங்கட்கிழமை 27.12.2010 காலை பதினோரு மணிக்கு, சென்னையில் இருக்கும் தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.


“ஸ்பெக்ட்ரம் பற்றி விசாரிக்க, பா.ஜ.க.வின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். இயற்பியல் பேராசிரியரான ஜோஷி, இதற்கு மிகவும் பொருத்தமானவர். இதை நான் வரவேற்கிறேன்.


சி.பி.ஐ கைப்பற்றிய ராசாவின் டைரியில் நான்கு முன்னணி அரசியல்வாதிகள், மத்திய இணை அமைச்சராக இருந்து சமீபத்தில் முதல்வரான ஒருவர் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது. இவர்களைப் பற்றி சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும்” என்றார்.


“பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சில அரசியல் தலைவர்கள் சொல்கிறார்களே!” என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு,


“யார் சொன்னா? இண்டியன் கவர்மெண்ட் சொன்னாளா? ஸ்றீலங்கா கவர்மெண்ட் சொன்னாளா? அமெரிக்கன் கவர்மெண்ட் சொன்னாளா? சிலபேர் அப்படி சொல்லிண்டு திரியறா! அவாளெல்லாம் அரசியல் வித்வைகள். அதை எதுக்கு நாம நம்பணும்” என்றார்.


“பிரதமர், உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து இருப்பதாக சொல்லப்படுகிறதே!” என்றபோது,


“புலிகளே இல்லை. அப்புறம் எங்கிருந்து ஆபத்து வரும். இறுதிப்போர் நடந்தபோது, பிரபாகரனுக்கு சிதம்பரம் ஒரு கடிதம் எழுதினார். ‘ஆயுதத்தை ஒப்படைச்சிட்டு சரனடைஞ்சா, நாங்க உங்களைக் காப்பாத்துறோம்’னு சொல்லியிருந்தார். அதைப் படிச்சிட்டு, வைகோ, நெடுமாறன்கிட்ட பிரபாகரன் அட்வைஸ் கேட்டார்.


‘இந்த எலக்‌ஷன்ல பி.ஜே.பி.தான் ஜெயிக்கப்போவுது. அப்படி ஜெயிச்சா, தனி ஈழமே வாங்கிடலாம். நீங்க தொடர்ந்து போரை நடந்துங்கோ’ன்னு இவா சொல்லியிருக்கா. பிரபாகரன், ராஜீவ் கொலைக் குற்றவாளி. அவருக்கு, சிதம்பரம் எப்படிக் கடிதம் எழுதலாம். எனவே, சிதம்பரம் பதவி விலகவேண்டும்” என்றார்.


“தமிழகம் வந்த ராகுல், தாஜ் கன்னிமரா ஓட்டலில் வைத்து தமிழக அறிவுஜீவிகளை சந்தித்துவிட்டு சென்றிருக்கிறாரே. அது பற்றி உங்கள் கருத்தென்ன?” என்று கேட்டதற்கு,


“யார் அந்த ராகுல்? ராகுல்னா யாரு? அவருக்கு அரசியல் தெரியுமா? கொள்கை ஏதாவது இருக்கா? சரியான மக்கு. காலேஜ் படிக்கும்போது ஹிந்தி சப்ஜெக்ட்லயே ஃபியில் ஆனவர்தான் ராகுல்.


2001-ல் பாஸ்டன் ஏர்போர்ட் போனபோது போலீஸ் அவரை பிடிச்சு விசாரிச்சாங்க. அப்போ அவர்கிட்ட 1 லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்கன் டாலர் இருந்தது. ஏது அந்தப் பணம்? அது மட்டுமில்லை. ஒரு பிளாஸ்டிக் கவர்ல பவுடர் இருந்தது. அது ஹெராயினா, பிரவுன் சுகரா எனக்குத் தெரியாது.


உடனே, வாஜ்பாய்க்கு போன் பண்ணி, சோனியாகாந்திதான் அவாளைக் காப்பாத்தினார். எல்லாத்தையும் எழுதி வாங்கிட்டு, எப்போ என்கொயரிக்கு கூப்பிட்டாலும் வரணும்’னு எச்சரிக்கை பண்ணித்தான் பாஸ்டன் போலீஸ் அவரை வெளியே விட்டா” என்றார்.


இறுதியாக... “எல்லா ஊழலும் சோனியாகாந்திக்கு தெரிஞ்சுதான் நடக்குது. இந்த ஆட்சியை கவிழ்க்க நான் ரெடி” என்று முடித்தார்.


குறிப்பு: இந்தத் தகவலை பத்திரிகைகளில் தேடாதீர்கள்.

4 comments:

Chittoor Murugesan said...

நீங்க நக்கலுக்குத்தான் எழுதினிங்கன்னு கடைசி வரியை படிச்சப்பிறகுதான் புரிஞ்சது.

ஹூம்..அரசியல் இந்த நிலைமைக்கு வந்திருச்சு

நல்லாவே எழுதறிங்க.. வாழ்த்துக்கள்

திங்கள் சத்யா said...

முருகேசன் சார்! இன்னும் நீங்க விளையாட்டுப் பிள்ளையாவே இருக்கீங்க. சாமி சொன்னது அத்தனையும் கடைந்தெடுத்த உண்மை. பத்திரிகை, தொலைக்காட்சிகள் இதைப் பிரசுரிகவிலை. அதனல்தான் தேடவேண்டாம் என்றேன்.

சண்முககுமார் said...

வாழ்த்துக்கள்


இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

திங்கள் சத்யா said...

சித்தரை நேரில் பார்த்த அனுபவம் வாசித்தேன். ஆச்சர்யமாக இருந்தது. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அவற்றி வணங்குவதும் இல்லை.

ஆனாலும், சில வேளைகளில் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதீத ஈடுபாடு ஏற்படுவதுண்டு. சித்தர்கள் மீது எனக்கு பயங்கரமாக ஆர்வம் இருக்கிறது. தகவலுக்கு நன்றி.