Thursday, January 27, 2011

"முதல்ல இந்த நடிகப்பசங்களை ஒழிக்கணும். மன்றங்களை ஒழிக்கணும்." -எடிட்டர் லெனின்


சென்னை சங்கமம் நடத்திய ‘நாளைய சினிமா’ மூன்றாவது பதிவு.

‘‘மைனா படத்துக்கு என்னைக் கூப்பிட்டு கரெக்ஷென் பண்ணச் சொன்னாங்க. நான் படத்தைப் பார்த்துட்டு, கலைப்புலி தானுகிட்ட சொன்னேன். அப்படியும் அவர், படத்தை வாங்கலை. அது நாளைய சினிமாதான்.

நாளைய சினிமா வரணும்னா, முதல்ல தியேட்டர் கிடைக்கணும். அதுக்கு கிராமங்கள் தோறும் சின்னச் சின்ன தியேட்டர்களை அரசாங்கம் கட்டணும். சிட்டில ஏன் இவ்வளவு கட்டணம் வசூலிக்கிறாங்க? இப்போ, ஒரு வாரத்துக்கு எவ்வளவு வேணும்னாலும் வித்துக்கலாம்னு சொல்றாங்க. இதெல்லாம் எந்தப் படத்துக்காக? 200 ரூபா கொடுத்து படம் பார்க்கிறவன் யாரு? நீங்க சொல்ற அந்த மஃப்ஸல் மக்களா? இல்லையே!

நான் அஞ்சாதே படம் பார்த்தேன். ஏன் அந்தப் படத்துக்கு பெஸ்ட் டைரக்டர் விருது கொடுக்கலை? காரணம், கமிட்டி. கேரளாவுல என்னை கூப்புடுறான்யா கமிட்டிக்கு. நேஷனல் அவார்டு தேர்ந்தெடுக்க டெல்லிக்கு கூப்பிடுறான். ஆனா, தமிழ்நாட்ல மட்டும் கூப்பிடவே மாட்றான். இங்க நீதிபதி, நீதியரசர்லாம் வேண்டாம். அவங்களுக்கு என்ன தெரியும்? அதுக்கு பதில் ஞானராஜசேகரன், ட்ராட்ஸ்கி மருது, எஸ்.பி.ஜனநாதனை உட்கார வை. அப்பத்தான், நாளைக்கு நல்ல படம் வரும்.

இந்த நீதியரசர்லாம் இருக்கக்கூடாது. இதை நான் இருபது வருஷத்துக்கு முன்னாடிலருந்து சொல்லிட்டு வர்றேன். வள்ளுவர் கோட்டத்துல நான், ஜனநாதன்லாம் நின்னு துன்டறிக்கை கொடுத்தோம். போலீஸ் என்னை ‘வெளிய போ’ன்னு சொல்லிட்டாங்க. நாளைய சினிமா நல்லதா வரணும்னா, முதல்ல இந்தக் கமிட்டி ஒழியணும்.

எல்லாரும் சொல்றாங்க.
‘நாயகன்.’
26 ஆயிரம் அடிபா. மனிரத்னம்ங்கிறதால ‘ஆ...’ ன்னு நினைக்கக்கூடாது.
இதுல அமானுஷ்யம் ஒண்ணும் கிடையாது.
26 ஆயிரம் அடி எடுத்துட்டா! யார் அப்புறம் ராஜா? ஐ ச்சூஸ் மை டைரக்டர்.

நான்தானய்யா. எடிட் பண்றோம். ஸ்ரீதர் சார் வந்து கேட்கிறார்.

‘என்ன பண்றீங்க லெனின்?’
‘நாயகன்’
‘குட் பார்ட் ஆஃப் த ஃபில்ம் வில் பி இன் த ஸ்கிரீன்ல?’ அப்டீன்னார்.

எனவே, வாட் ப்ளே யூ ஆர் சீயிங் ஆன் த ஸ்க்ரீன், தட் இஸ் கால்டு ஸ்க்ரீன் பிளே.
அப்படீன்னு நான் சொல்லலை. பீம்சிங்கே சொன்னது.

ஜெயகாந்தன்லாம்கூட ஒண்ணுமில்லை. சொல்ல முடியும். எப்டி எழுதினாங்க. அது எப்டி எடுக்கப்பட்டதுன்னு. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ ரிலீசாகி பத்தே நாள்ல அடுத்த படம் வருது.

ரசிகர்கள் கரெக்டாதான் இருக்காங்க. ஆனா, முதல்ல இந்த நடிகப்பசங்களை ஒழிக்கணும். மன்றங்களை ஒழிக்கணும்.

இதை நான் முதல்லேர்ந்து சொல்லிகிட்டு வர்றேன்பா. பீராபிஷேகம் பண்றானுங்க. பீரை, நீயாவது குடிச்சித் தொலையேன்டா. நாற்பது நாப்பத்தஞ்சு வருஷமா ரெண்டு பேர், ரெண்டு பேராதான் வந்துட்டு இருக்கான், தமிழ் சினிமாவுல. பாக்கறீங்களா? அந்தக் காலத்துலேர்ந்து.

இதெல்லாம் ஹிஸ்ட்ரிபா. அது ஏன் ரெண்டு பேர் மாத்திரம் வர்றான்? நார்த் இன்டியால பாருங்க. வதவதன்னு வந்துட்டு இருக்கான். காதலிக்கும்போது பின்னாடி பத்திருபது பேர் ஆடுறான். என்னய்யா இதெல்லாம்? இருவது பேரை கூட்டி வச்சுக்கிட்டு எவனாவது காதல் பண்ணுவானா?

ஹீரோயின்களைப் பத்தி பேச வேணாம். பாவம். ஏன், இங்க ரேவதி வரலை. அது அவர்கள் தவறு.

என்னை கூப்பிடும்போது, ‘அட்ரஸ் குடுங்க. இன்விடேஷன் தரணும்’னு சொன்னங்க. அதெல்லாம் வேணாம்பா. நானே வர்றேன். என்கிட்ட சில இன்விடேஷன் குடுங்க. நான் பாக்க்கிறவங்களுக்கெல்லாம் தர்றேன்னு சொன்னேன்.

நாங்க அழைக்காமலே வருவோம். சிலர் அழைத்தாலும் போகாத சினமும் உண்டு. பெண்களை யாரும் வரவேண்டாம்னு சொல்லலை. ஏன் சுகாசினி வரலை?

‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ல நசிக்கும்போது,
‘இன்னா சார்! கேமராக்கு முன்னாடிலாம் நடிச்சதில்ல சார்.’
‘நடிம்மா’
‘இல்ல சார், போஸ்டரெல்லாம் ஒட்னா, மூத்திரம்லாம் பேய்வாங்களே சார்’

இன்னாடா இது? அசிங்கமா பேசுறாரேன்னு பாக்கலாம். இதைவிட அசிங்கமா பாத்துட்டீங்களே.

சென்சார்ல கோவனம் கீழ விழுதுபா. கோவனம் தாம்பா தமிழனோட அடையாளம். அது கீழ விழுது. அதை கட் பண்ணுன்றான்.
சரி, கட் பண்ணிட்டேன். லேடீஸ்லாம்கூட இருந்தாங்க.
‘இல்ல சார். அந்தக் கோமனம்...’
‘அட தொப்புள்லாம் பாத்துட்டீங்களேம்மா.’
‘த்தூ... காரி உமிழ்கிறேன்.’

அப்படீன்னு சொல்றார் லெனின். அந்த லெனின். நான் சொல்லலை.

‘டேய்! இப்ப அது இருக்காடா? மெதுவ்வாடா!’ இது அதைவிட அசிங்கமில்லையா?
முட்டாள்கள். இதையெல்லாம் அலோ பண்ணியிருக்காங்க.

டி.எம்.கே வந்தான், ஏ.டி.எம்.கே வந்தான், அப்புறம் சென்ட்ரல்ல இருந்து காங்கிரஸ் வந்தான். அவங்கள்லாம் தேவையில்ல. அப்பதான் நல்ல படம் வரும்.
அங்க உக்காந்து சொல்வானுங்க.
‘கட். மியூட்.’

வாட் யூ நோ அபவுட் த டெக்னிக்?

இதுல ரிவைசிங் கமிட்டின்னு ஒண்ணு வச்சிருக்கான். அதுலயும் நம்மாளுங்க சிலபேரை வச்சிருக்கான். அவங்களுக்கும் ஒண்ணும் தெரியாது. அட! நல்ல படம் வரணும்னா, கலைப்புலி தானு மாதிரியெல்லாம் இருக்கக்கூடாது.

எல்லா படங்களுக்கும் மானியம் குடுக்கனும்னு அவசியமில்ல. ஒரு பிரின்ட் எடுத்தா மானியம் இல்லன்றான். எட்டு பிரின்ட் இல்லைன்னா உள்ளே வராதன்னு சொல்றான். இதையெல்லாம் உடைங்க. இல்லைன்னா, எக்சிஸ்ட் த ரூல்.

எனவே, அரசாங்கம், இந்தக் கமிட்டி, இந்த கான்செப்ட், இந்த மானியம் போன்ற சமாச்சாங்களை உடைக்கணும். அப்போ, ஒரு பிரின்ட்டாவது எடுக்கிறவன் வருவான். அந்த ஒரு பிரின்ட்டுக்கு எட்டு லட்சத்தை வாங்கி, நாலஞ்சு பிரின்ட்டாவது போடுவான்.

இப்போ பிரின்ட்டே தேவையில்ல. எல்லாம் கியூப் சிஸ்டம். ஓரு இடத்திலேர்ந்து நாலஞ்சு தியேட்டருக்கு ஒளிபரப்பலாம். ஆனா, டிஸ்ட்ரிபூட்டருக்கோ, இவனுக்கோ ஒண்ணும் தெரில.

ஒரு படத்துக்கு நூத்தியம்பது காப்பி எடுத்தா, ஃபர்ஸ்ட்டு சீன்ல தேங்காயை உடைக்கிறான்.

‘எந்திரன்ன்’னு சொன்னங்களே! ‘ரன்ன்ன்’தான் அது.
எவ்ளோ வேஸ்டேஜ்?
அதுக்கு அப்புறம் வேஸ்ட் வாங்கறதுக்கு வருவான் ஒருத்தன். கோனிப்பைல வச்சி மிதிச்சி, ஃபிலிமை உள்ளே தள்ளுவான். தேங்கா உடைச்சதெல்லாம் அதுலதான் இருக்கும். இதுபோலதான் நிறைய படம் வருது.

எல்லாத்தையும் அமானுஷ்யமா நீங்க நினைக்கக்கூடாது. அதுக்காக சொன்னேன்.

‘நல்ல கதை இருந்தா குடுங்க’ன்னார் லிங்குசாமி. எவ்ளோ பேர் நல்ல கதை வச்சிட்டிருக்காங்கபா. ஏன், எஸ்.ராமகிருஷ்னன் இல்ல? நானும் படிச்சிருக்கேன். ஒரு டைரக்டருக்கு என்ன தெரியணுமோ, அதைவிட அந்த ஸ்கிரிப்ட்ல இருக்கு. ரைட்-அப்தான் முக்கியம்.

பாசமலரில் சிவாஜிகணேசனும் சாவித்ரியும், பீம்சிங்கும் இல்லையென்றாலும் அந்தப்படம் ஓடியிருக்கும்.
நான் சொல்லலை. பீம்சிங் சொன்னது.

எனவே, இதை நோக்கிப் போங்க. பேஸிக்கா நம்ம கல்சுரல்ஸ்! ஏன்னா, உலகப் படங்கள் என்னா சொல்லுதுன்னா, அவங்கவங்களோட கல்ச்சர்ஸ். என்னா கல்ச்சர்னெல்லாம் கேக்காதீங்க. நீங்க பாருங்க.’’

Thursday, January 20, 2011

‘‘என்னை அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்டாலும் கவலையில்லை.’’ -பாலுமகேந்திரா வருத்தம்!


*சென்னை சங்கமம் நடத்தியநாளைய சினிமாநிகழ்வின் இரண்டாம் பதிவு.

‘‘நேற்றைய சினிமாவோடு வளர்ந்தவன் நான். அதை ரசித்து, நெகிழ்ந்து, சிரித்து, அழுது, தூக்கங்கெட்டுப்போய் வாழ்ந்திருக்கிறேன். எனவே, அதைப்பற்றி பேசலைன்னா சரியாக இருக்காது. அந்த சினிமாவை, இன்று இருக்கக்கூடிய சினிமா வித்தகர்கள், ‘மேடை நாடகம்என்று ஒதுக்கலாம். ‘அதீதங்கள் அடங்கிய ஒன்றுஎன ஓரங்கட்டலாம். ‘அந்த சினிமாவில் வலிந்து, புனைந்து எழுதப்பட்ட, எதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட கதைகள் இருக்கிறதென்றுநிராகரிக்கலாம். ‘அது சினிமாவே அல்ல என்றுகூட சொல்லலாம்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமா, ஒலிப்பதிவு செய்யப்பட்ட ரேடியோ நாடகங்களாகவே இருந்தது. திரைக்குள்ளே போகவேண்டியதில்லை. வெளியே நின்று வசனங்களைக் கேட்டாலே போதும். படம் பார்த்த மாதிரி பீற்றிக்கொள்ளலாம். அதை, நிறைய செஞ்சிருக்கேன் நான். படம் பார்க்காமல், டென்ட் கொட்டகைக்கு வெளியே நின்று, படம் பார்த்த மாதிரி சொல்லியிருக்கிறேன். என்னென்ன சினிமா என்று நான் இங்கே சொல்ல விரும்பவில்லை. இதையும் நீங்கள் அந்த சினிமாவின் குற்றச்சாட்டாக சொல்லலாம்.

அப்ப எடுத்தப் படங்களை மறக்க முடியுமா? பீம்சிங் சார். அவரோட ஒரேயொரு படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைச்சது. i learned a lot, in that one film.

ஒரு விஷயத்தை நீங்கள் மறக்கக்கூடாது. அந்த சினிமாக்களில் எல்லாம் ஒரு அற்புதமான விஷயம் இருந்தது. அவைஆரோக்கியமான பொழுதுபோக்குப் படங்களாகஇருந்தது. அந்த ஆரோக்கியத்தை இன்று நான் இழந்துவிட்டோம்.

தெரிஞ்சோ, தெரியாமலோ, பிரக்ஞைபூர்வமாகவோ, இல்லையோ. அதை எங்கேயோ தொலைத்துவிட்டோம். அதன் பிறகு இன்றைய சினிமாக்கள் வந்தது. இதைப்பற்றி நான் பேசித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை. so, am not going to speak anything about, today cinema.

நாளையை சினிமா பற்றி நான் பேச விரும்பவில்லை. ஒரு படம் எடுத்து கான்பிக்கிறேன். அதைப் பாருங்கள். அந்த ஸ்கிரிப்ட் இப்போ முடிகிற தருவாயில் இருக்கு. ஜூன் அல்லது ஜூலையில் ஷூட்டிங் தொடங்குமென்று நினைக்கிறேன். எனவே, பேசுவதில் பிரயோஜனமில்லை. do it.

இன்றைக்குப் பேசப்படும் பல விஷயங்கள் பற்றி, என்னுள்ளே ஏற்பட்ட தேடல் காரணமாக, ஒரு சில புரிதல்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

இதற்கு முன்பு செய்யப்பட்டது என்கிற காரணத்தால், அதை நீங்கள் செய்யாமல் இருக்கவேண்டிய அவசியமில்லை. அதை நிராகரிக்கவேண்டாம். you do it. அதே விஷயத்தை, நீ எப்படி செய்கிறாய் என்பதுதான் எனக்கு முக்கியம்.

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை, வரையாத ஓவியர் யாராவது இருக்கிறார்களா? எனவே, ஆயிரம் தடவை செய்தாலும் சரி, அதை நீ எப்படி செய்கிறாய் என்பதுதான் முக்கியம்.

இரண்டவதாக, எந்த ஒரு படைப்பாளியும், இது முழுக்க முழுக்க எனக்குச் சொந்தமானது என்று சொல்ல முடியாது. இது என்னுடைய சமீபத்திய புரிதல். உள்ளது உள்ளபடி என்பது சினிமவில் கிடையாது. நான் பார்த்ததை, நான் விரும்பியபடி உனக்குக் காண்பிப்பதுதான். எனக்கு தெரிந்த விஷயத்தைத்தான் நான் காண்பிக்க முடியும். ஆனால், எனக்கே தெரியாத விஷயமிருக்கே! அதை யார் காண்பிப்பது?

ஒரிஜினல் படைப்பு என்று எதுவுமே கிடையாது. எனக்குள்ளே இருக்கிற சத்யஜித் ரேவை நான் என்ன பண்ணுவேன். என்னுள்ளே இருக்கிற அகிரகுரசேவாவை என்ன பண்ணுவேன்? என்னுடைய பாரதியை, கம்பனை நான் என்ன பண்ணுவேன்?

ஸோ, இதெல்லாம்... என்னுடைய ஜீன்ஸ். இவை எனக்குள்ளே இருக்கிறவரைக்கும் எனக்குத் தெரியாமலேயே அவை வந்துகொண்டிருக்கும். சில சமயம், தெரிந்து வெளிவரும். ஒரு உதாரணம் சொல்கிறேன். என்னுடைய பேரனைப் பார்த்து, என்னை மாதிரியே இருக்கிறான் என்று சொன்னால் நான் சந்தோஷப்படத்தானே வேண்டும்? தட் இஸ் மை ஜீன். அது குறித்து நான் எதற்கு வெட்கப்படவேண்டும்? எனவே, இன்றிருக்கும் இளைஞர்களுக்காகச் சொல்கிறேன். டோன்ட் வொர்ரி அபவுட், பீப்புள் டாக் டு திஸ் திங். அந்தச் சாயல் இருக்கு, இந்தச் சாயல் இருக்கு. அதைப்பற்றியெல்லாம் கவலையே படவேண்டாம்.

எந்த ஒரு விஷயத்தையும் இனிமே நீங்கள் புதுசாகச் சொல்ல முடியாது. பிகாஸ், எக்ஸ்போஷர் ஸோ மச். நீ எதைச் சொன்னாலும் அது எனக்கும் கொஞ்சம் தெரியும். முன்னாடி அப்படியில்லை. இப்போ அப்படி இருக்கு. ஸோ, நீ எதை சொல்றேங்கிறதை வைத்து நான் உன்னை மதிப்பிட மாட்டேன். நீ எப்படி சொல்லியிருக்கே. அதுதான் முக்கியம். போலீஸ் ஷ்டேஷனில் கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணை வைத்து நீ கதை பண்ணலாம். அது போன வருஷம் தினத்தந்தியில் வந்த செய்தி. எனவே, தெரிந்த விஷயத்தை, சினிமாவாக நீ எப்படிப் பண்ணியிருக்கே. அதுதான் முக்கியம்.

மிஷ்கின் பேசும்போது சொன்னார். audience must be ready to accept, good film. ‘நல்ல படம், நல்ல படம்னு சொன்னால் என்ன? நல்ல சினிமா என்பது என்ன? திங்க், இதுக்கு... ஒரு டெஃபினிஷனும் கிடையாது. நல்ல சாப்பாடு என்பது என்ன? ஒரு ஐயரிடம் கேட்டால், ‘சாம்பாரும் புளியோதரையும்என்பார். என்கிட்ட கேட்டால், ‘நல்... ஒரு கோழிக்காலும், கருவாட்டுத் துண்டும்என்பேன். நல்ல சினிமாவும் இந்த மாதிரிதான். நல்ல சினிமா என்பது, ‘மக்களிடமிருந்து ரத்தமும் சதையுமாக பிய்த்து எடுக்கப்பட்ட ஒரு கதை’.

மக்களுக்காக, மக்களுடைய மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்ட ஒரு கதை. ஊடக ஆளுமையுள்ள ஒரு படைப்பாளியால், எந்தவித சமரசங்களுக்கும் உட்படுத்தப்படாமல், இன்க்ளூடிங் கமர்ஷியல் காம்ப்ரமைஸஸ். நேர்மையோடும், கண்ணியத்தோடும் பண்ணப்படும்பொழுது, அங்கொரு நல்ல சினிமா பிறப்பதற்கான சாத்தியம் உண்டு என்று சொல்வேன்.

இளைஞர்களுக்கு நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன். நீங்க நிறைய படிக்கணும். ஆனா, படிக்க மாட்டேங்கறீங்க. என்னுடைய திரைப்பட பள்ளிக்கூடத்தில், the first tamil film school in the world. அங்கே தமிழ்லதான் பாடம் சொல்லிக்கொடுக்கிறேன். எல்லோரும் தரைல உட்கார்ந்துதான் பாடம் படிக்கிறாங்க. நவீன தமிழிலக்கியம் அங்கே ஒரு கட்டாயப் பாடமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு சிறுகதையை நீ படிச்சே ஆகணும். படிச்சா மட்டும் போதாது. புத்தகத்தை மூடி வச்சிட்டு, அந்தக் கதையை உன்னுடைய மொழியில் சொல்லணும். இந்தப் பயிற்சி ஒவ்வொரு நாளும் நடக்கிறது. ஏன், இந்தப் பயிற்சி கொடுக்கிறேன்?

என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள். ‘கதை நேரம் பண்றப்போ 52 கதைகளை எடுத்தீங்க சார். ஏன், புதுமைப்பித்தனை எடுக்கலை? அற்புதமான உன்னத படைப்புகள் இருக்கே. ஏன், இதையெல்லாம் நீங்க எடுக்கலை?’ன்னு கேக்கறாங்க. லாசரா. பிச்சைமூர்த்தி, செல்லப்பா, ஜெயகாந்தன், இவங்களையெல்லாம் ஏன் எடுக்கலைன்னு கேட்கிறார்கள்.

அவங்க மேல உள்ள மரியாதை காரணமா நான் எடுக்கலை. ஊடக மாற்றம் என்று வரும்போது ரொம்ப அநியாயமான ஒரு விஷயத்தை நான் செய்யவேண்டியிருக்கும்.

ஒரு சிறுகதையில் இருந்து நான் எதைக்கொண்டு போகலாம்? மாஸ்டர் பீஸ் என்று சொல்லப்படுகிற ஒரு கதையின் உள்ளடக்கமும், சொல்லப்பட்ட விதமும் சேர்ந்து, அற்புதமான ஒரு புணர்வு இருக்கும். அந்தப் புனர்வு காரணமாக அது உண்ணதமாக இருக்கும். அந்தப் படைப்பாளியினுடைய தமிழ் ஆளுமை, அவனுடைய பாண்டித்யம், சொற்தேர்வு, வாக்கிய லயம், கதை சொல்கிற லாவகம். இதையெல்லாம் நான் என்ன பண்ணுவேன் சினிமாவில்? குப்பைக் கூடையில்தான் போடணும். i dont want to do that.

மேட்டர் என்னய்யா? அதைத்தானே நான் கொண்டு போகணும். என்னுடைய மொழி சினிமா. அந்த மொழியில்தான் சொல்வேன். முடிந்தால் உன்னைவிட பெட்டராக. எனவே, இவர்களின் உன்னதங்களை தூர நின்று நான் கும்பிட்டதோடு சரி.

நல்ல சினிமா எடுத்தால், அதைப் பார்ப்பதற்கு ஆள் இருக்கனுமில்லையா? அப்படி இல்லையென்றால், நல்ல சினிமா எடுத்து என்ன பிரயோஜனம்? நல்ல சினிமாவைப் புரிஞ்சுக்கிற அளவுக்கு அவனுக்கு அறிவு இருக்கணுமில்லையா? இது எங்கிருந்து வரும்?

இளைஞர்கள் உலக சினிமாக்களை பார்க்கவேண்டும். உலக சினிமா இங்கே நிறைய கிடைக்கிறது. அது பைரஸியா இருந்தாலும் என்னவா இருந்தாலும் நான் வாங்குவேன். 20 ரூபாய்க்கு ஒரு உலகப்படம் கிடைக்குதுன்னா நான் வாங்குவேன். என்னை அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்டாலும் கவலையில்லை.’’

கனிமொழியம்மா வருவாங்கன்னு பார்த்தேன் வரவில்லை. ராஜாத்தியம்மா இருக்காங்களா இங்கே? கனிமொழியும் இல்லை, ராஜாத்தியம்மாவும் இல்லை. கலைஞருக்குப் போய்ச் சேரணும் ஒரு விஷம். யாராவது அவர் காதுல போட்டு வச்சா சந்தோஷப்படுவேன்.

89-ல் அவருடைய 75-வது பிறந்தநாள்னு நினைக்கிறேன். கலையுலகம் மிகப்பெரியதொரு விழா எடுத்தோம். அப்போது, ‘சினிமா ரசனை பள்ளிக்கூடங்களில் கட்டாயப் பாடமாக வேண்டும். 11, 12-ம் வகுப்பில் வாரத்தில் ஒரு நாள் போதும். அப்படியொரு ஆடியன்ஸை நாம கிரியேட் பண்ணாத்தானே நல்ல சினிமா எடுக்க முடியும். ஆடியன்ஸே இல்லாம நல்ல சினிமா எடுத்து என்ன பண்றது? அந்த ஆடியன்ஸை பிரக்ஞைபூர்வமாக நாம் தயாரித்தாகணும். நல்லது எது, நஞ்சு எது என்று தெரியணும். அது பள்ளிக்கூடங்களில்தான் சாத்தியம்என்று கோரிக்கை வைத்தேன். வெங்கட்ராமன் பிரசிடென்ட்டாக இருந்தப்போ, டெல்லியில் ஒருதடவை கோரிக்கை வைத்தேன். ரெண்டு பேருமே ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், இதுவரை சினிமாவைப் பாடமாக்கவில்லை.’’

Sunday, January 9, 2011

நீயே சொல்லு லச்சுமி! நீயும் நானும் ஒண்ணா?


தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படுவதை எதிர்த்து, சென்னையைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அந்த மனுவில், “வேலை வாய்ப்பில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாணை பாரபட்சமானது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் பாடம் நடத்தப்படுகிறது. எங்களைப் போன்ற ஏராளமானவர்கள், ஆங்கில வழியில் கல்வித் தகுதி பெற்றிருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட மொழியில் படித்தவர்களுக்கு மட்டும் அரசு முக்கியத்துவம் கொடுப்பதென்பது, அரசியலமைப்புச் சட்டத்தையே மீறுவதாகும்.

அரசாங்கம், மாநில மக்கள் அனைவரையும் ஒரே சமமாக பாவிக்கவேண்டும். அவர்களை வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது. நான், ஆங்கில வழியில் படித்து பட்டங்களை பெற்றிருக்கிறேன். அரசின் இந்த ஆணையால் நான் பாதிக்கப்படுகிறேன். என்னைப்போல், தமிழ் வழி அல்லாமல் பட்டப்படிப்பு முடித்த பலரும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, அரசு பிறப்பித்திருக்கும் இந்த ஆணைக்குத் தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்.

ஜனவரி 7-ம் தேதி, இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.கே.சர்மா, அரசு பிறப்பித்த அரசாணைக்கு, வரும் 19-ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறார்.

அம்மா விசயலச்சுமி! நான் தெரியாமத்தான் கேக்கிறேன். நீயும் நானும் ஒண்ணா? ஒருவேளை சோத்துக்கு நீயோ, உன் ஆங்கில வழிக் கூட்டமோ ஏங்கியிருப்பீங்களா? உங்களுக்கு வறுமைன்னா என்னன்னு தெரியுமா? கிழிஞ்ச டவுசரோ, கிழிஞ்ச பாவாடையோ நீ போட்டிருக்கியா? அட்லீஸ்ட் பாத்திருப்பியா?

நீயும் சரி, உங்க கூட்டத்தாரும் சரி. ஒண்ணு, உங்கப்பாம்மா ரெண்டு பெரும் கெவருமெண்ட் ஜாப்ல இருப்பாங்க. இல்லைன்னா தொழிலதிபரா இருப்பாங்க. கெவுர்மெண்ட் ஜாப்னா, பெஞ்ச்சை தேய்ச்சிட்டு மாசாமாசம் சம்பளம் வாங்குறதோட நிக்காம, வெக்கம், மானம், சூடு, சொரனை, ஈவு, இரக்கம் எதுவுமில்லாம லஞ்சம் வாங்கி உங்களை மாதிரி ஆளுங்களை கொழுக்க வெப்பாங்க. தொழிலதிபரா இருந்தா, வருமாண வரில ஆரம்பிச்சி சட்ட விரோதமா என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வாம்ங்க. உங்க மொத்தக் குடும்பமும் ஊரை அடிச்சு உலைல போட்டு கொழுத்திருப்பீங்க. “மக்கள் அனைவரையும் சமமாக பாவிக்கவேண்டு”ம்னு நீ சொல்ற? உன் நெஞ்சத் தொட்டு சொல்லு. உனக்கு அந்த புத்தி இருக்கா?

எங்க படிப்பும் வாழ்க்கையும் எப்படி தெரியுமா விசயலச்சுமி?

வாழ்க்கைல லட்சியம்னு ஒண்ணு இருந்தா, அது வயிறாற சோறு தின்றது மட்டும்தான். ஒண்ணாம் வகுப்புலேர்ந்து எட்டாம் வகுப்புவரை தட்டைத் தூக்கி தலைல வச்சிட்டுதான் ஸ்கூலுக்குப் போவோம். காலைல எழுந்து பார்த்தா, சோத்துப் பானைல பருக்கையே இருக்காது. வெறும் தண்ணிதான் இருக்கும். அதுவும் பீநாத்தம் அடிக்கும். ஏன்னா, நீ எங்களுக்கு சலுகை கொடுக்கிறதா சொல்றியே கெவுர்மெண்ட்டு. அது போட்ட புழுத்த அரிசி அப்பிடி. மாடு துன்றதுக்குகூட லாய்க்கில்லாத அதை அரிசியை, மனுஷங்க நாங்க சாப்பிடுவோம்.

உங்கப்பங்கம்மா கார்ல கொண்டாந்து எறக்குறாங்களே அந்த மாதிரி யாரும் எங்களை எறக்கமாட்டாங்க. மூணு மைலோ, பத்து மைலோ. நடந்துதான் ஸ்கூலுக்குப் போகணும். வருஷத்துல நாலு மாசம் காலையும் சாய்ந்திரமும் பனமரம்தான் எங்களுக்கு சோறு. நான் பத்தாவது படிக்கிறவரை எங்க தெருவுல கரெண்ட் கிடையாது. அவ்வளவு ஏன்? காடா விளக்குகூட இல்லை. தம்மாத்துண்டு, ‘கா’வெளக்குன்னு ஒண்ணு இருக்கும். 50 மிலி மரெண்ணைதான் அதோட கொள்ளளவே. கருமம் புடிச்சது. லேசா காத்தடிச்சாலே கப்புனு அமிஞ்சிறும்.

காத்துக்கு ஏத்த மாதிரி ஒவ்வொரு செகண்டும் சுடர் ஆடும். இதனால புஸ்தகத்துல இருக்கிற எழுத்துங்க எல்லாம் செகண்டுக்கு ஒருவாட்டி டான்ஸ் ஆடும். அசையிற எழுத்தை எங்கிருந்து படிக்கிறது? மங்கிப்போன வெளிச்சம்ங்கிறதால வெத்து வயிறா இருந்தாலும் தூக்கம் கண்ணைச் சொருகும். “எவண்டா இந்தப் படிப்பைக் கண்டு புடிச்சான்”னு கருவிக்கிட்டே தூங்கிப்போவோம். அதுவும் உங்களை மாதிரி சொகுசு மெத்தையோ, ஏ.சி. ரூமோ கிடையாது.

இருக்கிற ஒரே பாய்ல பெரியங்க படுத்துக்குவாங்க. நாங்க தென்ன ஓலை, இல்லைன்னா கோனிப்பையை விரிச்சி படுத்துக்குவோம். உங்களை மாதிரி விடியிறவரை தூங்க முடியாது. நடு ராத்திரி ரெண்டு மணி, இல்லைன்னா மூணு மணிக்கே முழிச்சுக்குவோம். அப்படி முழிச்சாதான் பனம்பழம் பொருக்க முடியும். பொருக்கி வந்த பனம்பழங்களை ஆளுக்கு நாலா பங்கிட்டு, விடியங்காலை அஞ்சு இல்லைன்னா ஆறு மணிக்கு பனவோலை போட்டு கொளுத்துவோம். சாப்ட்ட மிச்சத்த கொஞ்சிச்செடி இல்லைன்னா, குப்பைல வச்சி புதைச்சிருவோம். இல்லைன்னா, யாராச்சும் தூக்கினு பூடுவாங்க. சாய்ந்திரம் வந்து சாப்டனுமே. அதுக்குத்தான் இந்த ஏற்பாடு.

ஏன்னா, ராத்திரிக்கு எந்த வீட்லயும் சோறு இருக்காது. சில சமயம், மரத்து மேலயெல்லாம் மறைச்சி வச்சிருக்கோம். சாப்பிடும்போதுகூட, தரைல நின்னு சாப்ட்டா, யார்னா பங்கு கேப்பாங்கன்னு மரத்து மேல உக்காந்தே சாப்பிடுவோம். எப்பப்பாரு எங்க நெனப்பு சோறு கஞ்சியை நோக்கித்தான் இருக்கும். மாடு மேய்க்கிறவனை கண்டாகூட பொறாமையா இருக்கும். அவனுக்குத்தான் சாய்ங்காலமானா, முதலியார் ஊட்ல் கஞ்சி ஊத்துவாங்க. “ங்கோத்தா தேவிடியாப்பசங்க. மாடு மேய்க்க அனுப்பாம, பள்ளிக்கொடம் அனுப்பறாங்க”ன்னு எங்க அப்பனையும், ஆத்தாளையும் திட்டுவோம்.

பனம்பழம் இல்லாத நாள்ல, ரோடோரமா வளந்திருக்கும் கொய்யாமரம், ஈச்சமரம்(இப்ப இருக்கிற பசங்களுக்கு அந்தக் குடுப்பினைகூட இல்லை), கொஞ்சிப்பழம், நாவப்பழம்னு எது கிடைக்குதோ, அதை எடுத்து எங்க வயித்துப் பசியை போக்கிக்குவோம்.

இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது விசயலச்சுமி. ஸ்கூலுக்குப் போனா, பத்தாவதுக்கு மேலதான் பெஞ்ச்சில உக்காரணும். அதுவரைக்கும் தர சீட்டுதான். தரைல நவுந்து நவுந்து டவுசர், ரெண்டு சைடும் பஞ்சாயிடும். “போஸ்ட் மேன் வர்றாருடா”ன்னு பசங்கள்லாம் கிண்டல் பண்ணுவாங்க. ஒரு பிகரைக்கூட எங்களால கரெக்ட் பண்ண முடியாது. இந்த வாத்திப் பசங்க இருக்கானுங்களே! எங்ககிட்ட பேப்பர் இருக்குதா, பேனா இருக்குதான்னு எதுவுமே கேக்கமாட்டானுங்க. “ஏண்டா வீட்டுப் பாடம் எழுதிட்டு வரலை?”ன்னு சொல்லி நாலஞ்சு தைல மெளாரா சேர்த்து வச்சி அடிப்பானுங்க. பனம்பழம் பொருக்கக்கூட லாயக்கில்லாம ரெண்டு கையும் நஞ்சிடும். இதையெல்லாம் நினைக்கும்போது பள்ளிக்கூடம்னாலே எங்களுக்கு பயமா இருக்கும். பேயைக் கண்டா மாதிரி நடுங்குவோம்.

ஏற்கெனவே கீஞ்ச டவுசரு. இதுல மத்தியான வேளைல வேற தட்டத் தூக்கினு சோத்துக்கு அலையணும். நினைச்சிப் பாரு எங்க நிலைமைய? ஒரு கரண்டிக்கு மேல போட மாட்டா அந்த ஆயாம்மா. அந்தச் சோறும் நாத்தம்புடிச்ச ரேஷன் அரிசிதான். மஞ்ச கலர்ல ஸ்கூல் செவுரு மாதிரியே இருக்கும். சாப்ட்டு கைகழுவி, மோந்து பாத்தாலும் நாறும். இதையெல்லாம் சகிச்சிகிட்டு வகுப்புல உக்காந்தா, என்ன எழவுக்கு பாடம் நடத்துறான்னு அந்த வாத்திப் பயலுக்கும் தெரியாது, எங்களுக்கும் தெரியாது. டியூஷன் படிக்கிற ஒண்ணு ரெண்டு புள்ளைங்க மட்டும் மாங்கு மாங்குனு தலையாட்டும். உதைக்கிறதை தவிர வேறெதையும் சொல்லித்தராத எங்க ஊர் வாத்திப் பசங்க, சிகரெட்டை ஊதிக்கிட்டு ஊட்டுக்கு கிளம்பிடுவானுங்க. வச்ச பனம்பழம் இருக்குமா இருக்காதாங்கிற நினைப்புலயே நாங்க ஊடுபோய்ச் சேருவோம்.

இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது விசயலச்சுமி. ஆனா, எங்களுக்குத் தெரியும். நீ யாரு, உன்னை இப்பிடி கேஸ் போட வச்சவன் யாரு? இந்த கேஸை எந்த நீதிபதிகிட்ட கொண்டு போவனும்னு முடிவு பண்ணி காய் நவுத்துனவன் யாருன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். மாசா மாசம் பீஸ் கட்டி நீ இங்லீஸ் படிக்கிற. கடைசில உனக்கு கவெர்மெண்ட்டு வேலை இல்லைன்னு சொல்லிட்டாங்கன்னா, எவனாவது அப்புறம் பிரைவேட் ஸ்கூல்ல படிப்பானா? அப்புறம் கல்வித் தந்தைகள்லாம் இன்னாத்துக்கு ஆவுறது?

இங்க வந்து 20 பர்சென்ண்டை தடுத்து நிறுத்தனும்னு கேக்கிறியே, ஓயெம்மார் ரோட்ல இருக்கிற கம்பெனிகள் எல்லாம் அண்ட்ரட் பர்செண்ட் உங்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு பண்றானுங்களே! அங்க வந்து நாங்க சமத்துவம் பேச முடியுமா? முதல் தகுதியா இங்லீஸ் பேசணும். பொன்ணுங்கன்னா, சூப்பர் பிகரா இருக்கணும். பையனுங்கன்னா பர்சனாலிட்டியா இருக்கனும். காப்ரேசன் புள்ளைங்களுக்கு இதெல்லாம் இருக்குமா?

நானும் காப்ரேசன் ஸ்கூல்ல படிச்சவன்தான். ஆனா, மெட்ராஸ்ல இருக்கிற அத்தினி ‘பப்’பையும் சுத்திப் பாத்துட்டேன். இங்லீஸ் படிச்ச பொண்ணுங்கள்லாம் அங்க எதுக்கு வர்றாளுங்க, ஏன் வர்றாளுங்க, என்னென்ன பண்றாளுங்கன்னு பாத்துக்கிட்டுதான் இருக்கேன். நீ படிச்ச இங்கிலீஸால ஒரு வெங்காயத்தைகூட வெலை குறைக்க முடியாது. அப்புறம் எதுக்கு கெவுர்மெண்ட் ஜாபு?

நாட்ல அத்தினி விசயங்களையும் தனியார்மயமாக்கணும்னுதானே நீயும் உன் கூடாளியும் துடிக்கிறீங்க. அப்புறம் எதுக்கு கெவுர்மெண்ட் ஜாபு? துன்னுட்டுத் தூங்கவா? அதைத்தான் உங்கப்பங்கொம்மா சம்பாதியத்துல செஞ்சிட்டு இருக்கீங்களே! அப்புறம் எதுக்கு கெவுர்மெண்ட் ஜாபு?

ஆனா, எனக்குத் தெரியும் லச்சுமி. அந்த மந்திர், இந்த மந்திர், அந்த பவன், இந்த பவன்ன்னு எல்லாத்தையும் கெவுர்மெண்ட்டே எடுத்து நடத்தனும். நீயும் கெவுர்மெண்ட் ஸ்கூல்ல படிக்கணும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., எம்.எல்.ஏ., எம்.பி., டைரட்டர், கமிஸ்னர், கிளார்க், பியூன், வாத்திப் பசங்களோட பசங்க, ஏன்... குப்பை வார்றவனா இருந்தாகூட கெவுர்மெண்ட் சம்பளத்தை எவனெல்லாம் வாங்குறானோ அவனெல்லாம் கெவுர்மெண்ட் ஸ்கூல்லதான் பசங்களை படிக்க வைக்கனும்.

அப்படியொரு சட்டத்தைப் போடணும். கெவுர்மெண்ட் ஸ்கூல்ல படிக்கிறவனுக்கு மட்டும்தான் கெவுர்மெண்ட் வேலைன்னு இன்னொரு சட்டம் போடணும்.

வருஷா வருஷம் ஸ்டேட் பர்ஸ்ட், டிஸ்ட்ரிக்ட் பர்ஸ்ட் அறிவிக்கும்போது, தமிழ்நாட்ல, தமிழ் மீடியம் படிச்ச புள்ளைங்களோட மார்க்கை மட்டுமே கணக்குல எடுத்துக்கணும்.

அப்புறம் பாறேன்! உன் ஸ்கூலுதான் என் ஸ்கூலு, என் ஸ்கூலுதான் உன் ஸ்கூலு. அப்புறம் எதுக்கு 20 சதவீத ஒதுக்கீடு!

Tuesday, January 4, 2011

"ஐ.ஏ.எஸ் படித்தால் டாஸ்மாக் எம்.டி.யாகலாம்" -கவர்மென்ட் ஒயின்ஷாப், பிரைவேட் பள்ளிக்கூடம்!


ஒரு காலத்தில் சாராயம் விற்றவர்கள்தான் இன்றைக்கு கல்வித் தந்தைகளாக இருக்கிறார்கள். சாராயத்தைப் போலவே கல்வியிலும் காசு கொட்டியதால், இன்றைக்கு மந்திரிமார்களும் இன்னபிற பலான தொழில் செய்பவர்களும் இதை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த பத்திருபது வருடங்களாக அடித்தக் கொள்ளையின் வலி தாங்காமல் பொதுமக்கள் அலற... ஒரு நீதிபதியை நியமித்தது தற்போதைய தி.மு.க அரசு.

மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.11,000. உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.8,000. நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.5,000. நர்சரி மற்றும் தொடக்கப் ​பள்ளிகளுக்கு ரூ.3,500 என தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்தார் அந்த நீதிபதி.

‘‘கட்டணத்தை உயர்த்தாவிட்டால் பள்ளிகளைத் திறக்க மாட்டோம்’’ என்றன தனியார் பள்ளிகள். ‘‘உத்தரவுக்குக் கீழ் படியாத பள்ளிகளை அரசே ஏற்று நடத்தவேண்டும்’’ என்றார்கள் கல்வியாளர்கள். அதன் பிறகு அந்த நீதிபதி பிய்த்துக்கொண்டு ஓடிவிட, ஆளும்கட்சி சேவை செய்துவந்த ஓய்வு ஒன்றை அந்தப் பதவியில் அமர்த்தினார்கள். அவர் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கே தெரியும். நாம் விஷயத்துக்கு வருவோம்.

காசு வரும் என்பதற்காக டாஸ்மாக்கையே எடுத்துக்கொண்ட நம் ‘குடியரசில்’, கல்வி நிறுவனங்களைக் குறை சொல்லிப் பிரயோஜனம் இல்லை.

‘‘பிளஸ்&டூ ரிஸல்ட் வெளியானதும், ‘நான் கலெக்டர் ஆவேன், டாக்டராவேன்’ என்று எடுத்துவிடும் மாணவர்களில் ஒருத்தராவது, ‘நாட்டு மக்கள் பஞ்சத்தில் வாடுகிறார்கள். நான் விவசாயி ஆவேன். உணவுத்தேவையை போக்குவேன்’ என்று சொல்கிறார்களா? காரணம், அவர்களுக்கு ஏழ்மை தெரியாது. இது மாணவர்களின் குற்றம் அல்ல. மூன்று வேளையும் மூக்குப் பிடிக்கத் தின்னும் மக்கள்கூட, விவசாயம் பற்றிப் பேசாமல் இருக்கக் காரணம், முட்டாள் கல்வியாளர்களும் சுயநல அரசியல்வாதிகளும்தான். தன்னுடைய கையில் மதுக்கடையை வைத்துக்கொண்டு, தனியாரின் கையில் கல்வியைத் தந்திருக்கும் தமிழக அரசுகள் திருந்தாதவரை, ஏழை எப்போதும் ஏழையாகவும் பணக்காரன் எப்போதும் பணக்காரனாகவே இருப்பான்’’ என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த இளஞாயிறு.

டாஸ்மாக்கை அரசாங்கம் எடுத்துக்கொண்டு, தனியாரிடம் கல்வியை ஒப்படைத்திருப்பது சரியா?

‘‘அரசாங்கம், டாஸ்மாக்கை எடுத்துக்கொண்டதை நான் தவறாகப் பார்க்கவில்லை’’ என்கிறார் பேராசிரியர் பிரபா.கல்விமணி.

பழங்குடி மக்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்துக்கொண்ட இவர், ஏழை மாணவர்களுக்காக ‘தாய்த் தமிழ்ப் பள்ளி’ என்கிற தமிழ் வழி பள்ளிக்கூடம் ஒன்றை திண்டிவனத்தில் நடத்தி வருகிறார்.

‘‘இதுவரை தனியாருக்குப் போய்க்கொண்டிருந்த மதுபான வருவாய், இப்போது அரசாங்கத்துக்கு கிடைக்கிறது. குடியைக் கெடுத்து, குடிமக்களை வாழ வைப்பதா? என்று கேட்கலாம். ‘மதுவிலக்கு’ இனி சாத்தியமில்லை என்பதால், இக்கேள்வியை தவிர்த்துவிடுவோம்’’ என்றுவிட்டு தொடர்ந்தார்.

‘‘கல்வி, தனியார்மயம் என்பது 1986&ல் தொடங்கியது. ‘புதிய கல்விக் கொள்கை’ ஒன்றை அறிமுகப்படுத்திய மத்திய அரசு, தனியார்களை இதில் முதலீடு செய்ய ஊக்குவித்தது. அதுவரை ‘சுயநிதிக் கல்லூரிகள்’ என்கிற வார்த்தையே தமிழகத்தில் கிடையாது. எல்லாமே அரசுக் கல்லூரிகள்தான். ஒன்றிரண்டு தனியார் கல்வி நிறுவனங்கள் இருந்தபோதிலும் அவை, அரசு உதவி பெறுபவையாகவே இருந்தன. 1990&களுக்குப் பிறகு, தனியார் பள்ளிகளுக்கு கொடுத்து வந்த நிதி உதவிகளை நிறுத்திக்கொண்ட தமிழக அரசு, ‘நீங்களே நடத்திக்கொள்ளுங்கள். நிதி ஆதாரங்களை பெற்றுக்கொள்ளுங்கள்’ என்றது.

நிலமை மோசமாவதை உணர்ந்துகொண்ட இடதுசாரி இயக்கங்கள், கல்வி தனியார் மயமாவதை எதிர்த்து போராட்டங்களை நடத்தின. ஆனால், தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பி.ஜே.பி போன்ற பெரிய கட்சிகள் இதை பொருட்டாகவே மதிக்கவில்லை. காரணம், தனியார் கல்லூரிகளால் கிடைக்கவிருந்த வருவாய்தான். சோம்பேறி ஆசிரியர் இயக்கங்களும் இது குறித்து அக்கரைப்படவில்லை. இதே நேரம், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு மாற்றாக ‘மத்தியில் இந்தி, மாநிலத்தில் தமிழ்’ என்று இரு மொழிக் கொள்கையை முன் வைத்தது தி.மு.க. ஆனால், ஜனநாயகப்படியும் அறிவியலின்படியும் கேட்டிருக்க வேண்டியது என்னவோ, ஒரு மொழிக் கொள்கைதான்.

அதாவது, எது பேச்சு மொழியோ, அதுதான் ஆட்சி மொழியாக இருக்கவேண்டும். இதுபோன்ற நடைமுறைகள் ரஷ்யாவிலும் இன்னும் பல ஐரோப்பிய நாடுகளிலும் இன்றைக்கு நடைமுறையில் இருக்கிறது. இதையெல்லாம் தி.மு.க உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. இதன் விளைவாக இந்தி எதிர்ப்பு திசை மாறி, ஆங்கில மோகத்தின்பால் மக்கள் தள்ளப்பட்டனர். ‘தாய் மொழி தவிர, வேறெந்த மொழியாலும் தரமான கல்வியைக் கொடுக்க முடியாது’ என்பது தெரிந்தும்கூட, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தனியார் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்தார்கள். இந்த ஆங்கில மோகம்தான் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் உருவாக முக்கியக் காரணம்.’’ என்கிறவர்,

‘‘பொதுவாக, பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெறுவது ஆங்கிலவழி மாணவர்கள்தான். எனவே, தனியார் பள்ளிகள்தான் தரமானவை என்பது மக்களின் நம்பிக்கையாகவும் இருக்கிறது. அப்படியானால், தனியார் பள்ளி மாணவர்கள் புத்திசாலிகளா? என்றால், ‘இல்லவே இல்லை’. நெல்லை மாநகராட்சிப் பள்ளியில் பத்தாவது படித்த ஜாஸ்மின் என்கிற சிறுமி, 495 மார்க்குகள் வாங்கி மாநிலத்தில் முதலாவதாக வந்திருக்கிறார். அப்படியிருக்க, தனியார் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறக் காரணம் என்ன தெரியுமா? அவர்கள், ஒன்பது மற்றும் பிளஸ்&ஒன் வகுப்புகளை படிக்காமல், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பை மட்டும் தொடர்ந்து இரண்டு வருடங்கள் படிப்பதுதான். இது போதாதென்று பரீட்சை நேரத்தில் காப்பியடிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதுபோன்ற பள்ளிகள், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நிறைய இருக்கின்றன. தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவர்கள் இங்கே தங்கிப்(போர்டிங் ஸ்கூல்) படிக்கிறார்கள். எல்லோருமே வசதியானவர்கள். இவர்களால் நாட்டுக்கோ, சமுதாயத்துக்கோ எந்தப் பலனும் ஏற்படாது. ஏன் தெரியுமா? ஏழை மாணவர்களைப் பார்க்கிற வாய்ப்புகூட இவர்களுக்கு இல்லை. எனவே, ஏழைகளின் பிரச்னையே இவர்களுக்கு தெரியாது. உண்மையைச் சொன்னால், தொழிற்சாலையில் பழுக்க வைத்து அடிக்கிற இரும்புக்குச் சமமாக இவர்கள் இருக்கிறார்கள். இவர்களால், பொது வாழ்க்கையில் ஒரு சராசரி மனிதனாகக்கூட இருக்க முடியாது. இது மட்டுமில்லை. எதிர்காலத்தில் பெற்றோர்கள் மீது அக்கரை இல்லாதவர்களாகவே இப்படிப்பட்டவர்கள் இருப்பார்கள். மொத்ததில், ‘கல்வி என்பது மனிதனை உருவாக்குவதற்குப் பதில், மதிப்பெண் சான்றிதழ்களை உருவாக்கும் தொழிற்சாலையாக மாறிப்போய்விட்டது. அரசாங்கம் இதை உணரவேண்டும்.

இந்த ஆண்டு 8.56 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வெழுதி இருக்கிறார்கள். இதில், மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வெறும் 1.30 லட்சம்தான். இப்படியாக எல்.கே.ஜி. முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான தனியார் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை வெறும் பதினைந்தே சதவிகிதம்தான். மீதமுள்ள குழந்தைகள் அனைவருமே அரசுப் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். ஆக மொத்ததத்தில், அரசுப் பள்ளி மாணவர்கள்தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள். இவர்களை அறிவாளிகளாக்குவதுதான் ஒரு அரசாங்கத்தின் கடமையாக இருக்கவேண்டும்.

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள் என்றால், அது பதினைந்து சதவிகித மாணவர்களின் பிரச்னை. நாம் 85 சதவிகிதம் பற்றிக் கவலைப்படுவோம். இன்றைக்கு தொடக்கக் கல்வியில் இருந்தே நமக்கு சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. காமராஜர் காலத்தில் இருபது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருந்தார். கருணாநிதி காலத்தில் இது அறுபதுக்கு ஒன்று என ஆகிவிட்டது. கற்பித்தலில், ‘ஸ்டூடன்ட்&டீச்சர் ரேஷியோ’ என்பது மிகவும் முக்கியம். முன்னேறிய நாடுகளில் பத்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்கிறார். தமிழக அரசு இதைக் கருத்தில் கொண்டு ஆசியருக்கு இருபது மாணவர்கள் என்று மாற்றியமைக்க வேண்டும்.

கல்லூரிப் படிப்புகளை பொறுத்த அளவில், மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் சேருவதற்கான கட் ஆஃப் மார்க், 199.5. இதை, பன்னிரண்டாம் வகுப்பையே இரண்டாண்டுகள் ஈ ஓட்டிய மெட்ரிகுலேஷன் மாணவர்களால்தான் எடுக்க முடிகிறது. எனவே, தமிழ்வழி மற்றும் கிராமப்புற மாணவர்கள் இதில் தகுதி இழக்கிறார்கள். இதைத் தடுத்து, ஒவ்வொரு தொழிற் கல்வியிலும் சேர, தமிழ்வழி மாணவர்களுக்கு 25 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும். இதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்தில்(65&க்கும் அதிகமான கல்வி மாவட்டங்கள் உள்ளன) இருந்தும் குறைந்தது ஒரு மாணவரையாவது தேர்ந்தெடுக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக கல்விக்கூடங்களை அரசுடமையாக்கி அதிக நிதி ஒதுக்குவது மிகவும் நல்லது’’ என்கிறார்.

‘‘கல்விக்கூடங்களை அரசுடமையாக்குவது சாத்தியமா?’’

‘‘அரசாங்கம் நினைத்தால் நிச்சயமாக முடியும். அப்படி ஒரு கல்விப் புரட்சி அவசியம்’’ என்கிறார் பா.ம.க வழக்கறிஞரான கே.பாலு.

கல்வி சம்பந்தப்பட்ட பல்வேறு வழக்குகளில் ஆஜராகியிருக்கும் பாலு, ‘‘பொதுவாகவே, சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் என்பவை, தவறான வழியில் சம்பாதித்த பணத்தை வருமாண வரியில் இருந்து ஏமாற்றவும், அதைப் பாதுகாக்கவும்தான் ஆரம்பிக்கப்படுகின்றன. ‘2020&ல் நாங்கள் வல்லரசு’ என்கிறது இந்தியா. எல்லையில் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் பயந்துகொண்டு கோடிகளைக் கொட்டிக்கொண்டிருந்தால் என்றைக்குமே அது சாத்தியமாகாது. தொழில்துறை முன்னேற்றம் என்று கூறிக்கொண்டு அந்நிய முதலீடுகளை வரவேற்று ஷோ காட்டுகிறார்கள். நாட்டில், ஐநூறு கோடி பேர் இருக்கிறோம் என்றால், அனைவருமே வளர்வதுதான் நாட்டினுடைய வளர்ச்சி. ஐ.டி. பார்க், அது இது என்று சொல்லிக்கொண்டு மூன்று சதவிகிதம் வளர்ந்துகொண்டிருந்தால் அதன் பேர் வளர்ச்சியல்ல. இது, ‘வளருது, வளருது’ என்று சொல்லிக்கொண்டு யானைக்கால் நோய் குறித்து சந்தோஷப்படுவதற்குச் சமம்.

இந்த மூன்று சதவிகித யானைக்கால் வியாதியினர், கோட், ஷூட் போட்டுக்கொண்டு உலக நாடுகளை வலம் வருவதன் மூலம் ‘ஒட்டுமொத்த இந்தியாவும் இதுதான்’ என்கிற எண்ணத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாம். மற்றபடி வளமான இந்தியாவை உருவாக்க முடியாது. வளர்ச்சி என்றால், அது ஏழை மற்றும் கிராமப்புற மக்களை நோக்கி இருக்க வேண்டும்.

2002&ம் ஆண்டு, அரசியலமைப்புச் சட்டம் 21(ஏ), 86&வது சட்டத் திருத்தத்தின்படி, ‘கல்வி, ஒருவரின் அடிப்படை உரிமை’ என்று அறிவித்தார்கள். ஆனால், இன்றுவரை அதை நிறைவேற்றுவதற்கான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மாறாக, தான் செய்ய வேண்டிய காரியத்தை தனியாரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அதையும் ஊழல் மயமாக்கியிருக்கிறார்கள். கல்வி என்பது சேவைதானே ஒழிய, கட்டமைப்புக்கு ஏற்றார்போல் கட்டணம் வசூலிக்கும் வியாபாரமில்லை.

அங்கீகாரமின்மை, கட்டமைப்பு வசதியின்மை, கட்டணக் கொள்ளை என்று சட்டத்துக்குப் புறம்பாக செயல்படும் எத்தனையோ கல்வி நிலையங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இதில் ஒன்றையாவது இழுத்து மூடியிருக்கிறார்களா? நாட்டுடமையாக்கி இருக்கிறார்களா? இல்லையே. ஆனால், டாஸ்மாக்கை மட்டும் அரசுடமையாக்கி இருக்கிறார்கள்.

தலித்துகள், பழங்குடியினர் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் கல்வியை உயர்த்த, முதலில் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும். குடிப்பழக்கத்திலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும். பொதுவாக, போதை வஸ்துக்கள் மக்களிடம் போய்ச் சேராமல் தடுக்கவேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை’ என்கிறது அரசியலைப்புச் சட்டம் 46 மற்றும் 47. அந்த வகையில், ஒரு அரசாங்கம் என்பது போதைப் பொருளைத் தடுக்க முடியாத கையாலாகாத அரசாங்கமாகக்கூட இருக்கலாம். ஆனால், சட்டத்துக்கு நேர்மாறாக பொதைப் பொருளை விற்பது என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது.

அதனால்தான், ஒரு ஐ.ஏ.எஸ் படித்த அதிகாரி டாஸ்மாக்கினுடைய எம்.டி.யாக இருக்கிறார். ‘எந்த மாவட்டத்தில் சேல்ஸ் குறைந்திருக்கிறது? ஏன் குறைந்தது?’ என்று விசாரிப்பதுதான் இவருடைய பணி. வெட்கமாக இல்லை. இதற்காகவா, இவர்கள் ஐ.ஏ.எஸ் படித்தார்கள்? டாஸ்மாக் நிறுவனத்தின் இந்தச் செயலை எதிர்த்து, அதாவது ‘ஒவ்வொரு கடையும் இத்தனை பாட்டில்கள் விற்றாகவேண்டும் என்று டாஸ்மாக் அதிகாரி டார்கெட் நிர்னயித்திருக்கிறார். பணம் கிடைக்கிறது என்பதற்காக குடிக்கச் சொல்லி மக்களை வற்புறுத்தக் கூடாது’ என்று கூறி உயர்நீதி மன்றத்தில் நாங்கள் வழக்கு போட்டோம். ‘அய்யோ, அப்படியெல்லாம் சொல்லவே இல்லை’ என்று தமிழக அரசு பல்டியடித்துவிட்டாலும், வாய்மொழி உத்தரவாக இன்றுவரை அது பின்பற்றப்பட்டு வருகிறது. எனவேதான், பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்திலேயே டாஸ்மாக் வைத்திருக்கிறார்கள். மாலை நேரத்தில் மதுவும் புகையுமாக மக்கள் அதில் உட்கார்ந்துகொள்கிறார்கள். டாஸ்மாக்கை நடத்துவது அரசாங்கம் என்பதால், காவல்துறையினரும் இதை வேடிக்கைப் பார்க்கிறார்கள். இதுதான் இன்றைய நிலவரம்.

‘ஒரு குழந்தை, மூன்று கிலோமீட்டர்களுக்கு மேல் பள்ளிக்கு நடந்து செல்லக்கூடாது’ என்றார் காமராஜர். ‘ஐய்யா, ஜில்லாவுக்கு மூணு பள்ளிக்கூடம்தான்னு உத்தரவு இருக்கு. அதனால முடியாதுங்கய்யா’ என்றார்கள் அதிகாரிகள். காமராஜரோ, ‘மக்களுக்கு பயன்படாத சட்டம்னா, தூக்கிக் குப்பைல போடுங்கய்யா’ என்றார் கோபமாக.

அப்படிப்பட்டத் தலைவர்கள் இன்று அதிகாரத்தில் இல்லை. டாஸ்மாக்கைத் தேடி மூன்று கி.மீ நடக்கக்கூடாது என்னதே இப்போதைய லட்சியமாக இருக்கிறது. வளரும் நாடாக அமெரிக்கா இருந்த சமயம், நாட்டின் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு நாடாளுமன்றத்துக்கு வந்தது. அதில் ராணுவத்துக்கென்று பல கோடி டாலர்களை ஒதுக்கியிருந்தார்கள். அதிபர் கென்னடியா என்பது சரியாகத் தெரியவில்லை. ‘நாட்டு மக்களுக்கு ஒதுக்குவதை விட்டுவிட்டு நான்கு சுவற்றுக்கு ஏன் இவ்வளவு பணம்? இதில் ஐம்பது சதவிகிதத்தை எடுத்து கல்விக்கு செலவிடுங்கள்’ என்று உத்தரவு போட்டார். அதனால்தான் அமெரிக்கா இன்றைக்கு வல்லரசாக இருக்கிறது.

இந்தியா இதை முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும். ராஜதந்திர கொள்கைகளை நல்லவிதமாகப் பின்பற்றி ராணுவச் செலவினங்களைக் குறைக்கவேண்டும். அந்தப் பணத்தை நாட்டின் கல்வி வளர்சிக்காக பயன்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், ஒரு கிரையோஜெனிக் இயந்திரம் இல்லை, நம்முடைய மாணவர்கள் ஓராயிரம் கிரையோஜெனிக் இயந்திரங்களை தாயார் செய்து இந்தியாவை உலக வல்லரசாக்குவார்கள். இதற்கான கல்விப் புரட்சி இப்போதே ஆரம்பிக்கப்பட வேண்டும்’’ என்கிறார்.

குறிப்பு:

‘டாஸ்மாக்’ விற்பனை 2003-ம் ஆண்டு துவக்கப்பட்டது.

2003 - 2006 வரை மது விற்பனை எட்டாயிரம் கோடி ரூபாய்.
2007 - -2008 வரை 10 ஆயிரத்து 486 கோடி ரூபாய்.
2008 - -2009 வரை 12 ஆயிரத்து 831 கோடி ரூபாய்.
2009 - -2010 நிதியாண்டில் மார்ச் வரை 14 ஆயிரத்து 926 கோடி ரூபாய்.
2010 - மார்ச் முதல் டிச-25 வரை 11 ஆயிரத்து 887 கோடி ரூபாய்.

ஆண்டு கணக்கின்படி ஜனவரி துவங்கி டிசம்பர் வரை 2009-ம் ஆண்டில் மது விற்பனை 13 ஆயிரத்து 981 கோடி ரூபாய் இருந்தது.
இந்த விற்பனையை அதிகரிக்கும் வகையில், ‘டாஸ்மாக்’ நிறுவனத்தின் 2010-ம் ஆண்டுக்கான விற்பனை இலக்கு, 2009-ம் ஆண்டைவிட ‘கூடுதலாக 2,000 கோடி’ இருக்கவேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், அரசின் எதிர்பார்ப்பையும் தாண்டி, 16,445 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்து டாஸ்மாக் சாதனை படைத்துள்ளது.

Saturday, January 1, 2011

"தமிழக முதல்-அமைச்சர் ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருந்து பாதுகாப்பு கொடுத்தார். அதனால் நான் தைரியமாக இருந்தேன்." ரஞ்சிதா கிளுகிளு!


பெரும் பரபரப்பைக் கிளப்புவார், ஒரு பூகம்பமே வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு, எக்ஸ்கிளுகிளுஸிவ் பேட்டி என்று ரேப்பரிலும், எட்டு கால தலைப்புச் செய்தியகவும் வரவேண்டிய ரஞ்சிதா, "ச்சப்"பென்று நேற்று பெங்களூர் பத்திரிகையாளர் முன்பு ஆஜராகிவிட்டார்.

ரஞ்சிதாவைக் காதலித்த லட்சக்கனக்கான டமில் இலைஞர்களில் அடியேனும் ஒருவன். இன்றுவரை அவர் மீதான எனது காதல் குறையவே இல்லை. அதே சமயம், அவர் அவிழ்த்துவிடுகிற பொய்களைத் தாங்கிக்கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை.

எல்லா மக்களையும் போலவே ரஞ்சிதாவும் இயல்பு வாழ்க்கை வாழவேண்டும் என்பதுதான் எமது விருப்பமும், எமது நிர்வாகத்தின் விருப்பமும்கூட. ஆனால், இன்னமும் அவர், அந்த பெண் பித்தன் நித்தியானந்தனுக்கு ஜால்ரா போட்டு வருவதுதான் சகிக்க முடியாமல் இருக்கிறது. இதைக்கூட சகித்துக்கொள்ளலாம். இருக்கிற வேலைகளுக்கு மத்தியில் இந்தம்மாவுக்கு முதல்வர் பாதுகாப்பு கொடுத்தார் என்று சொல்லியிருப்பதுதான் எரிச்சலின் உச்சம்.

நெற்றைய பேட்டியில் ரஞ்சிதா கூறியிருப்பதாக தினத்தந்தி வெளியிட்ட செய்தி:

“நித்யானந்தா சாமியாருடன் நான் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியானது. இது முற்றிலும் பொய்யானது. அந்த வீடியோ காட்சிகள் சித்தரிக்கப்பட்டு திரித்து வெளியிடப்பட்டு உள்ளன. ஆபாச வீடியோ காட்சிகள் உண்மையானது என்று தடயவியல் சோதனையில் உறுதி செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். என்றாலும் அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல. இதை நான் உறுதியாக கூறுகிறேன். அந்த காட்சியில் இருப்பது வேறு பெண்ணா? என்பது குறித்து நான் ஒன்றும் கருத்து சொல்ல முடியாது.

வீடியோ காட்சிகள் வெளியான சம்பவத்துக்கு பிறகு நான் தலைமறைவானேன் என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. அவ்வாறு நான் தலைமறைவாக இருக்கவில்லை. போலீசாரிடமும், பத்திரிகையாளர்களிடமும் பேசக்கூடாது என்று கடந்த பல மாதங்களாக எனக்கு கொலை மிரட்டல் வந்தது. போலீசாரிடம் இருந்து சட்டரீதியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ எனக்கு ஏதாவது தொந்தரவுகள் வருமோ என்றும் நான் அஞ்சினேன். அதனால்தான் நான் கடந்த ஆண்டு மார்ச் 3-ந் தேதி அமெரிக்காவுக்கு சென்றேன். பின்னர் ஜூன் 14-ந் தேதி மீண்டும் இந்தியாவுக்கு வந்தேன். அதன் பிறகு நான் சென்னையில் தான் இருந்தேன்.

நானும் மற்ற பெண்களை போல் சராசரியான பெண்தான். நான் மரியாதையான குடும்பத்தை சேர்ந்தவள். அந்த மிரட்டலை கண்டு மிகவும் பயந்துபோய்விட்டேன். எனது உயிருக்கு பயந்து நான் வெளியே வரவில்லை. இப்போதும் தொடர்ந்து எனக்கு மிரட்டல் வந்து கொண்டுதான் இருக்கிறது. எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் தமிழக முதல்-அமைச்சர் ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருந்து பாதுகாப்பு கொடுத்தார். அதனால் நான் தைரியமாக இருந்தேன். வீடியோ காட்சிகளை வெளியிட்ட லெனின் கருப்பனுக்கும், எனக்கும் எந்த முன்விரோதமும் இல்லை. லெனின் கருப்பன் பின்னால் இருந்து சில முக்கிய புள்ளிகள் செயல்படுகிறார்கள். என் மீது வீண்பழி போடப்பட்ட பிறகும், எனது குடும்பத்தினர் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

நித்யானந்தாவின் லட்சக்கணக்கான பக்தர்களில் நானும் ஒருத்தி. மற்றவர்களை போல் நானும் ஆசிரமத்திற்கு வந்து போனேன். நான் எந்த தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை. திட்டமிட்டு சதி செய்து என்னை பிரச்சினையில் சிக்கி வைத்துவிட்டனர். வீடியோ காட்சிகள் வெளியான நாளில் இருந்து மிகவும் வேதனைப்பட்டு வருகிறேன். என்னை லெனின் கருப்பன் கற்பழிக்க முயற்சி செய்தார். நான் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சேர்ந்தபோது எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்துப் போடவில்லை. அவ்வாறு என்னிடம் யாரும் கையெழுத்தும் வாங்கவில்லை.

இப்போது கூட வக்கீல்கள் கொடுத்த தைரியத்தின் அடிப்படையில் நான் வெளியே வந்து உங்களிடம் பேசுகிறேன். நான் சினிமாவுக்கு வந்து 18 ஆண்டுகள் ஆகிறது. எனது சினிமா வாய்ப்புகள் எதுவும் பாதிக்கவில்லை. தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் போதிய பாதுகாப்பு கொடுத்தால், லெனின் கருப்பனை பின்னால் இருந்து இயக்குபவர்கள் குறித்த விவரங்களை பகிரங்கப்படுத்துவேன்.”

இதில், லெனின் கருப்பன் தன்னை கற்பழிக்க முயற்சித்ததாக என் கனவுக்கன்னி கூறியிருப்பதுதான் காமெடியின் உச்சம். எப்படி? 80-களில் வெளியான தமிழ்ப்பட ரேப் சீன்போல லெனின் கருப்பன் முயன்றிருப்பாரோ! நித்தியும், ரஞ்சியும் டெய்லி ஜல்சா செய்றதை பார்த்துட்டு, எனக்கும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்னு கேட்டிருப்பார். இதைப்போய் ரேப்’னு சொன்னா எப்படி ரஞ்சி? ச்சீ போ! உஅனக்கும் உண்மை பேசத் தெர்ல, உன் கூட்டாளி நித்திக்கும் உண்மை பேசத் தெர்ல.

பார்ட்-2

ரஞ்சிதாவின் உளறலை மறுத்து லெனின் கருப்பன் பேசியதை தினமலர் வெப்ஸைட் வீடியோவாக வெளியிட்டிருக்கிறது. இங்கே க்ளிக்குங்கள்....