Thursday, January 27, 2011

"முதல்ல இந்த நடிகப்பசங்களை ஒழிக்கணும். மன்றங்களை ஒழிக்கணும்." -எடிட்டர் லெனின்


சென்னை சங்கமம் நடத்திய ‘நாளைய சினிமா’ மூன்றாவது பதிவு.

‘‘மைனா படத்துக்கு என்னைக் கூப்பிட்டு கரெக்ஷென் பண்ணச் சொன்னாங்க. நான் படத்தைப் பார்த்துட்டு, கலைப்புலி தானுகிட்ட சொன்னேன். அப்படியும் அவர், படத்தை வாங்கலை. அது நாளைய சினிமாதான்.

நாளைய சினிமா வரணும்னா, முதல்ல தியேட்டர் கிடைக்கணும். அதுக்கு கிராமங்கள் தோறும் சின்னச் சின்ன தியேட்டர்களை அரசாங்கம் கட்டணும். சிட்டில ஏன் இவ்வளவு கட்டணம் வசூலிக்கிறாங்க? இப்போ, ஒரு வாரத்துக்கு எவ்வளவு வேணும்னாலும் வித்துக்கலாம்னு சொல்றாங்க. இதெல்லாம் எந்தப் படத்துக்காக? 200 ரூபா கொடுத்து படம் பார்க்கிறவன் யாரு? நீங்க சொல்ற அந்த மஃப்ஸல் மக்களா? இல்லையே!

நான் அஞ்சாதே படம் பார்த்தேன். ஏன் அந்தப் படத்துக்கு பெஸ்ட் டைரக்டர் விருது கொடுக்கலை? காரணம், கமிட்டி. கேரளாவுல என்னை கூப்புடுறான்யா கமிட்டிக்கு. நேஷனல் அவார்டு தேர்ந்தெடுக்க டெல்லிக்கு கூப்பிடுறான். ஆனா, தமிழ்நாட்ல மட்டும் கூப்பிடவே மாட்றான். இங்க நீதிபதி, நீதியரசர்லாம் வேண்டாம். அவங்களுக்கு என்ன தெரியும்? அதுக்கு பதில் ஞானராஜசேகரன், ட்ராட்ஸ்கி மருது, எஸ்.பி.ஜனநாதனை உட்கார வை. அப்பத்தான், நாளைக்கு நல்ல படம் வரும்.

இந்த நீதியரசர்லாம் இருக்கக்கூடாது. இதை நான் இருபது வருஷத்துக்கு முன்னாடிலருந்து சொல்லிட்டு வர்றேன். வள்ளுவர் கோட்டத்துல நான், ஜனநாதன்லாம் நின்னு துன்டறிக்கை கொடுத்தோம். போலீஸ் என்னை ‘வெளிய போ’ன்னு சொல்லிட்டாங்க. நாளைய சினிமா நல்லதா வரணும்னா, முதல்ல இந்தக் கமிட்டி ஒழியணும்.

எல்லாரும் சொல்றாங்க.
‘நாயகன்.’
26 ஆயிரம் அடிபா. மனிரத்னம்ங்கிறதால ‘ஆ...’ ன்னு நினைக்கக்கூடாது.
இதுல அமானுஷ்யம் ஒண்ணும் கிடையாது.
26 ஆயிரம் அடி எடுத்துட்டா! யார் அப்புறம் ராஜா? ஐ ச்சூஸ் மை டைரக்டர்.

நான்தானய்யா. எடிட் பண்றோம். ஸ்ரீதர் சார் வந்து கேட்கிறார்.

‘என்ன பண்றீங்க லெனின்?’
‘நாயகன்’
‘குட் பார்ட் ஆஃப் த ஃபில்ம் வில் பி இன் த ஸ்கிரீன்ல?’ அப்டீன்னார்.

எனவே, வாட் ப்ளே யூ ஆர் சீயிங் ஆன் த ஸ்க்ரீன், தட் இஸ் கால்டு ஸ்க்ரீன் பிளே.
அப்படீன்னு நான் சொல்லலை. பீம்சிங்கே சொன்னது.

ஜெயகாந்தன்லாம்கூட ஒண்ணுமில்லை. சொல்ல முடியும். எப்டி எழுதினாங்க. அது எப்டி எடுக்கப்பட்டதுன்னு. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ ரிலீசாகி பத்தே நாள்ல அடுத்த படம் வருது.

ரசிகர்கள் கரெக்டாதான் இருக்காங்க. ஆனா, முதல்ல இந்த நடிகப்பசங்களை ஒழிக்கணும். மன்றங்களை ஒழிக்கணும்.

இதை நான் முதல்லேர்ந்து சொல்லிகிட்டு வர்றேன்பா. பீராபிஷேகம் பண்றானுங்க. பீரை, நீயாவது குடிச்சித் தொலையேன்டா. நாற்பது நாப்பத்தஞ்சு வருஷமா ரெண்டு பேர், ரெண்டு பேராதான் வந்துட்டு இருக்கான், தமிழ் சினிமாவுல. பாக்கறீங்களா? அந்தக் காலத்துலேர்ந்து.

இதெல்லாம் ஹிஸ்ட்ரிபா. அது ஏன் ரெண்டு பேர் மாத்திரம் வர்றான்? நார்த் இன்டியால பாருங்க. வதவதன்னு வந்துட்டு இருக்கான். காதலிக்கும்போது பின்னாடி பத்திருபது பேர் ஆடுறான். என்னய்யா இதெல்லாம்? இருவது பேரை கூட்டி வச்சுக்கிட்டு எவனாவது காதல் பண்ணுவானா?

ஹீரோயின்களைப் பத்தி பேச வேணாம். பாவம். ஏன், இங்க ரேவதி வரலை. அது அவர்கள் தவறு.

என்னை கூப்பிடும்போது, ‘அட்ரஸ் குடுங்க. இன்விடேஷன் தரணும்’னு சொன்னங்க. அதெல்லாம் வேணாம்பா. நானே வர்றேன். என்கிட்ட சில இன்விடேஷன் குடுங்க. நான் பாக்க்கிறவங்களுக்கெல்லாம் தர்றேன்னு சொன்னேன்.

நாங்க அழைக்காமலே வருவோம். சிலர் அழைத்தாலும் போகாத சினமும் உண்டு. பெண்களை யாரும் வரவேண்டாம்னு சொல்லலை. ஏன் சுகாசினி வரலை?

‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ல நசிக்கும்போது,
‘இன்னா சார்! கேமராக்கு முன்னாடிலாம் நடிச்சதில்ல சார்.’
‘நடிம்மா’
‘இல்ல சார், போஸ்டரெல்லாம் ஒட்னா, மூத்திரம்லாம் பேய்வாங்களே சார்’

இன்னாடா இது? அசிங்கமா பேசுறாரேன்னு பாக்கலாம். இதைவிட அசிங்கமா பாத்துட்டீங்களே.

சென்சார்ல கோவனம் கீழ விழுதுபா. கோவனம் தாம்பா தமிழனோட அடையாளம். அது கீழ விழுது. அதை கட் பண்ணுன்றான்.
சரி, கட் பண்ணிட்டேன். லேடீஸ்லாம்கூட இருந்தாங்க.
‘இல்ல சார். அந்தக் கோமனம்...’
‘அட தொப்புள்லாம் பாத்துட்டீங்களேம்மா.’
‘த்தூ... காரி உமிழ்கிறேன்.’

அப்படீன்னு சொல்றார் லெனின். அந்த லெனின். நான் சொல்லலை.

‘டேய்! இப்ப அது இருக்காடா? மெதுவ்வாடா!’ இது அதைவிட அசிங்கமில்லையா?
முட்டாள்கள். இதையெல்லாம் அலோ பண்ணியிருக்காங்க.

டி.எம்.கே வந்தான், ஏ.டி.எம்.கே வந்தான், அப்புறம் சென்ட்ரல்ல இருந்து காங்கிரஸ் வந்தான். அவங்கள்லாம் தேவையில்ல. அப்பதான் நல்ல படம் வரும்.
அங்க உக்காந்து சொல்வானுங்க.
‘கட். மியூட்.’

வாட் யூ நோ அபவுட் த டெக்னிக்?

இதுல ரிவைசிங் கமிட்டின்னு ஒண்ணு வச்சிருக்கான். அதுலயும் நம்மாளுங்க சிலபேரை வச்சிருக்கான். அவங்களுக்கும் ஒண்ணும் தெரியாது. அட! நல்ல படம் வரணும்னா, கலைப்புலி தானு மாதிரியெல்லாம் இருக்கக்கூடாது.

எல்லா படங்களுக்கும் மானியம் குடுக்கனும்னு அவசியமில்ல. ஒரு பிரின்ட் எடுத்தா மானியம் இல்லன்றான். எட்டு பிரின்ட் இல்லைன்னா உள்ளே வராதன்னு சொல்றான். இதையெல்லாம் உடைங்க. இல்லைன்னா, எக்சிஸ்ட் த ரூல்.

எனவே, அரசாங்கம், இந்தக் கமிட்டி, இந்த கான்செப்ட், இந்த மானியம் போன்ற சமாச்சாங்களை உடைக்கணும். அப்போ, ஒரு பிரின்ட்டாவது எடுக்கிறவன் வருவான். அந்த ஒரு பிரின்ட்டுக்கு எட்டு லட்சத்தை வாங்கி, நாலஞ்சு பிரின்ட்டாவது போடுவான்.

இப்போ பிரின்ட்டே தேவையில்ல. எல்லாம் கியூப் சிஸ்டம். ஓரு இடத்திலேர்ந்து நாலஞ்சு தியேட்டருக்கு ஒளிபரப்பலாம். ஆனா, டிஸ்ட்ரிபூட்டருக்கோ, இவனுக்கோ ஒண்ணும் தெரில.

ஒரு படத்துக்கு நூத்தியம்பது காப்பி எடுத்தா, ஃபர்ஸ்ட்டு சீன்ல தேங்காயை உடைக்கிறான்.

‘எந்திரன்ன்’னு சொன்னங்களே! ‘ரன்ன்ன்’தான் அது.
எவ்ளோ வேஸ்டேஜ்?
அதுக்கு அப்புறம் வேஸ்ட் வாங்கறதுக்கு வருவான் ஒருத்தன். கோனிப்பைல வச்சி மிதிச்சி, ஃபிலிமை உள்ளே தள்ளுவான். தேங்கா உடைச்சதெல்லாம் அதுலதான் இருக்கும். இதுபோலதான் நிறைய படம் வருது.

எல்லாத்தையும் அமானுஷ்யமா நீங்க நினைக்கக்கூடாது. அதுக்காக சொன்னேன்.

‘நல்ல கதை இருந்தா குடுங்க’ன்னார் லிங்குசாமி. எவ்ளோ பேர் நல்ல கதை வச்சிட்டிருக்காங்கபா. ஏன், எஸ்.ராமகிருஷ்னன் இல்ல? நானும் படிச்சிருக்கேன். ஒரு டைரக்டருக்கு என்ன தெரியணுமோ, அதைவிட அந்த ஸ்கிரிப்ட்ல இருக்கு. ரைட்-அப்தான் முக்கியம்.

பாசமலரில் சிவாஜிகணேசனும் சாவித்ரியும், பீம்சிங்கும் இல்லையென்றாலும் அந்தப்படம் ஓடியிருக்கும்.
நான் சொல்லலை. பீம்சிங் சொன்னது.

எனவே, இதை நோக்கிப் போங்க. பேஸிக்கா நம்ம கல்சுரல்ஸ்! ஏன்னா, உலகப் படங்கள் என்னா சொல்லுதுன்னா, அவங்கவங்களோட கல்ச்சர்ஸ். என்னா கல்ச்சர்னெல்லாம் கேக்காதீங்க. நீங்க பாருங்க.’’

1 comment:

bandhu said...

என்ன ஒரு தெளிவான பேச்சு! லெனின் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை!