Friday, October 28, 2011

ஏன் எதிர்க்கவேண்டும் ‘ஏழாம் அறிவை’?

 ‘‘இந்த நாடு நாசமாகப் போயிருப்பதற்கு மூன்று காரணங்களை படத்தில் சொல்கிறார் கதாநாயகி ஸ்ருதிஹாசன். அவை "Reservation, Recommendation and Corruption". அய்யா பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் அரும்பாடுபட்டு பெற்றுத்தந்த இடஒதுக்கீட்டை, நாடு நாசமாகப் போனதற்கான காரணங்களில் ஒன்றாக சொல்லும் அளவுக்கு தைரியம் வந்திருக்கிறது முருகதாஸ் அவர்களுக்கு!’’ -எழில் அரசன்.

-இதை மனதில் வைத்துக்கொண்டு வாசிப்புக்கு வாருங்கள்.
 "ஏ.ஆர்.முருகதாஸின் ‘எச்சில் அறிவு’" -இக்கட்டுரைக்கு முதலில் நான் வைத்த தலைப்பு இதுதான்.

“என்னடா இது, எட்டாவது அறிவுகூட கேள்விப்பட்டிருக்கோம். இவன், ‘எச்சில் அறிவு’ன்னு புதுசா ஒண்ணை சொல்றானே?”ன்னு யோசிக்காதீங்க.

‘‘இந்தப் படத்தைப் பார்த்தா, உங்க மயிரெல்லாம் நட்டுக்கும்’’னு சொல்கிறாரே முருகதாஸ்!

மயிர் நட்டுக்கொள்கிற அளவுக்கு அவரிடம், ‘கெத்து’(வீரம்) இருக்கவேண்டாமா?

‘‘சங்கறுத்து வாழ்ந்தாலும் வாழ்வோம், உன்போல் இரந்துண்டு வாழமாட்டோம்’’ என்று சிவனுக்கே சவால்விட்டுப் பேசுகிறாரே நக்கீரர். அப்படிப்படிப்பட்ட நக்கீரர் பரம்பரையில் வந்தவர் அல்லவா நீவீர். அந்த வீரம், தில்லு, உங்களுக்கு இருக்கணுமா வேண்டாமா?

(பட், ‘சங்கறுக்கிறது’ன்னா வேண்டாதவன் கழுத்தை அறுக்கிறது இல்லைங்க. அதைச் சிலபேர், ‘வலம்புரிச் சங்கு’ன்றான், சிலபேர் ‘ஆவுரிச் சங்கு’ன்றான். அது வேற கதை.)

நாம விஷயத்துக்கு வருவோம். ‘ஏன் நான் எச்சில் அறிவு’ங்கிறேன்?

தமிழன்னா, வீரம் வேணும்ல? கண்ட இடத்துல கையேந்தி பிச்சை எடுக்கக் கூடாதுல்ல?

ஓ.கே. உன்னால முடியல. மீறி, பிச்சை எடுத்துட்டீங்க. கம்முனு, ஃபிரன்ட்டையும் பேக்கையும் பொத்திட்டு ஓரமா போய் குந்திக்கணும்.

வாய் கிழிய உதார் விடக்கூடாது.

உனக்கு மட்டுமா இங்கே ஏழாம் அறிவு இருக்கு? எங்களுக்கும்தான் இருக்கு. நாங்களும்தானே நக்கீரர் பரம்பரை.

ஏற்கெனவே, ‘தமிழ் உணர்வைக் காசாக்குகிறதா ‘ஏழாம் அறிவு’ன்னு ஒரு பதிவு போட்டேன். அதை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், உள்ளுக்குள் ஒரு சந்தேகம் இருக்கலாம்.

‘‘இவங்க எப்பவுமே இப்படித்தாம்பா. ‘வினவு’ மாதிரி எல்லாத்துக்கும் குத்தம் சொல்வாங்க’’ன்னு நினைக்கலாம். அப்படி நெனச்சா அது தப்புங்க.

‘இல்லாத அறிவை’ எடுக்க, எங்கெங்கே கைநீட்டி, எச்சிலையை வாங்கினார் அய்யா முருகதாஸ்’னு ஒரு பட்டியல் போடுறேன். பாத்துக்கங்க:

1. பாம்பே சர்கஸ்
2. KFC
3. Indian oil extra premium
4. Barath petroleum
5. Durable Chrome Factory
6. Vodafone
7. Aircel
8. State bank of India
9. NAC Jewellers
10.Landmark
11.Fast track
12.Nilgiris
13.Lions Club
14.7g systems
15.Sea land cargo
16.Natural spa

-இவ்ளோதான், என் கண்ணுல பட்டது.

“இது என்னடா, புதுக் கதையா இருக்கு. இதுக்கும் எச்சிலைக்கும் என்ன சம்பந்தம்?”னு மீண்டும், மீண்டும் யோசிக்கிறீங்களா? நல்லா யோசியுங்க.

லிஸ்ட்ல போட்ட கம்பெனி மட்டுமில்லைங்க, ஒரு திரைப்படம் என்கிற வகையில், இயக்குநரின் அனுமதி இல்லாமல், சின்னதொரு ‘சுண்டெலி மயிரைக்கூட’ நீங்கள் திரையில் காட்ட முடியாது.

தயாரிப்பாளரோ, நடிகரோ அதில் தலையிட முடியாது. படத்துக்கான ஒப்பந்தம் போடும்போதே, இது குறித்து தெளிவாக விளக்கிவிட்டேதான் கையெழுத்திடுகிறார்கள். ‘இப்படி கையெழுத்திடக்கூடிய, நக்கீரரின் உண்மையான வாரிசுகளும் இங்கே இயக்குநர்களாக இருக்கிறார்கள்’ என்பது குறிப்பிடத்தக்கது. இது சினிமா உலக நண்பர்களுக்கு தெரியும்.

எனவே, ‘‘சுண்டெலி மயிரைக்கூட காட்ட முடியாது என்கிற நிலைமை இருக்க, இத்தனை கம்பெனிகள் திரைக்குள் நுழைந்தது எப்படி?’’

அத்தனையும் காசு ஸார், காசு.

டி.வி.ல விளம்பரம் காட்டினா, எப்படி செகன்டுக்கு செகன்டு ரேட்டு வசூலிக்கிறாங்களோ, அப்படித்தான் சினிமாவிலேயும். காட்சிக்கு நடுவே தனியார் நிறுவன விளம்பரங்கள் வந்தால், ஒவ்வொரு செகன்டும் லட்ச லட்சமாய் கொட்டும். அதைத்தான், அய்யா ஏயாரு முருகதாஸும் செஞ்சிருக்கார்.

இன்னும், சுடர்மணி ஜட்டி விளம்பரம் தவிர, மற்ற எல்லா விளம்பரங்களிலும் அவுத்துப்போட்டு ஆடி, அதற்கெனவே உள்ள ஆர்டிஸ்ட்டுகளின் வயிற்றில் அடித்த(இது மறைமுக அடிங்க) ‘ஆறு பட்டெக்ஸ்’(but, இங்குள்ள பட்டெக்ஸை, 'வேட்டை நாய் தொகுதி' என்கிறது லிஃப்கோ) தம்பிக்கு இது நன்றாகவே தெரியும்.

but, ஒன் திங். six pack is not a decision authority. இட்ஸ் ஒன்லி a நாடி நரம்பெல்லாம் முருக்கினதாஸ் கம்பெனி முடிவு.

ஆனால், இதைக்கூட தப்பிலைன்னு நீங்க வாதிடலாம்.

‘‘ஒண்பது பேர் சேர்ந்து அடிக்கிறதுக்கு பேர் வீரம் இல்லை, துரோகம்.(இந்த துரோகத்துல ஒண்ணு, உங்க ‘மம்மி கன்ட்ரி’யும்தானே மிஸ்டர் முருகதாஸ்? அதை எதிர்த்து ஏன் பேசவில்லை? செலக்ட்டிவ் அம்னீசியாவா?)

தமிழனா இருந்தா, திருப்பியடிக்கணும்’’ என்கிற வசனம் இருந்ததால், இல்லாத அறிவை திரையிட முடியாது என்று திருப்பி அனுப்பியதே இலங்கை அரசு.

வீரனா இருந்திருந்தால் என்ன பண்ணியிருக்கணும்?

‘ஒன்ஸ் மோர் ஓல்டு டயலாக்கு.’

‘‘சங்கறுத்து வாழ்ந்தாலும் வாழ்வோம். உன்போல் இரந்துண்டு(இந்தியா, பாகிஸ்தான், சீனாவிடம்) வாழமாட்டோம்’’ என்று சொல்லிட்டு வீரனாக அல்லவா திரும்பியிருக்கணும். இங்குள்ள தமிழர்களுக்கும், புலம்பெயர் தமிழர்களும் சுருதி மூலமாக தமிழ்ச் சுருதியேற்றும் நீங்கள், ராஜபட்சே முன் வாலைச் சுருட்டி back-ல் வைத்துக்கொண்டது ஏன்?

‘‘நக்கிவிட்டீர்களே அய்யா ராஜபட்சே காலை. நீக்கிவிட்டீர்களே அய்யா வீரஞ்செறிந்த ரோலை’’

நீங்களே நீக்கிட்டதால, ‘‘அடச்சீ, இது வெறும் குத்தாட்டப் படம்தானே’’ என்று ராஜபட்சேவும் விட்டுவிட்டானே அய்யா தியேட்டருக்குள்ளே... கடைசியில் என்ன ஆச்சு?

“வெட்டி வேலாயுதம், இல்லாத அறிவு’ ரெண்டு படத்துக்கும், பேண்டு வாத்தியக் கருவிகள் சகிதம், யாழ்ப்பாணத்துச் சந்தியில் நின்று இசை பாடியது இளைஞர் கூட்டம். அதே நேரம், மட்டக்களப்புப் பகுதியில் திரைப்பட நடிகர்களுக்குப் பாலாபிஷேகம் செய்து, பட்டாசு கொளுத்தி கொண்டாடியது இன்னொரு கூட்டம். திருகோணமலையில், படம் பார்ப்பதற்காக, ஒரு இலட்சியப் போராட்டமே நடத்தப்பட்டது. இவ்வீரப் போராட்டத்தில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரும் உண்டு.” -newyarl.com

இப்போது ராஜபட்சேவுக்கு மிகுந்த சந்தோஷம். “எங்க இந்த நாய்ங்களெல்லாம், ‘சுதந்திரம், போர்க்குற்றம், ஐ.நா.சபை., சேனல் -4’னு நமக்கெதிரா செயல்படப்போகுதோன்னு பயந்துகிட்டு இருந்தேன். நண்பர் முருகதாஸ் புண்ணியத்துல, ‘அதெல்லாம் ஒண்ணுமில்லை. நாங்க, விசய்க்கும், சூர்யா’வுக்கும் சொம்பு தூக்கிட்டு சந்தோசமா இருக்கோம்’னு சொல்லாம சொல்லிட்டானுங்க. இனி, ஐ.நா சபையே ஆய்வுக்கு வந்தாலும் கவலையில்லை”ன்னு பாக்கிற இடமெல்லாம் சொல்லிக்கிட்டு திரியிறாராமே...

எனவே, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பேராபத்தையும் மறந்து, சுருதி மூலமாக தமிழுணர்வை சுருதியேற்றிக்கொண்ட தமிழர்களே! இப்போது புரிகிறதா, “ஏன் எதிர்க்கவேண்டும் ‘இல்லாத அறிவை’?” என்பது!

8 comments:

Shanmugam Rajamanickam said...

அடி பின்னிட்டீங்க போங்க,
எவ்வளவுதான் மோசமா படமெடுதாலும் தவற சுட்டி காட்டுங்க தப்பில்ல. அது என்ன 'முறுக்கு'... கொஞ்சம் பாத்து திட்டுங்க பாஸ்,,,


//‘‘அடச்சீ, இது வெறும் குத்தாட்டப் படம்தானே’’ன்னு ராஜபச்சேவும் விட்டுட்டானே தியேட்டருக்குள்ள... கடைசில என்ன ஆச்சு?
“வெட்டி வேலாயுதம், இல்லாத அறிவு’ ரெண்டு படத்துக்கும், பேண்டு வாத்தியக் கருவிகள் சகிதம், யாழ்ப்பாணத்துச் சந்தியில் நின்று இசை பாடியது இளைஞர் கூட்டம். அதே நேரம், மட்டக்களப்புப் பகுதியில் திரைப்பட நடிகர்களுக்குப் பாலாபிஷேகம் செய்து, பட்டாசு கொளுத்தி கொண்டாடியது இன்னொரு கூட்டம். திருகோணமலையில், படம் பார்ப்பதற்காக, ஒரு இலட்சியப் போராட்டமே நடத்தப்பட்டது. இவ்வீரப் போராட்டத்தில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரும் உண்டு.”///

இந்த வரிகள் அருமை. கெட்ட வார்த்தைல கூட ராஜபக்சேவ திட்டுங்க.

திங்கள் சத்யா said...

மன்னிக்கணும்.

தலைவனுங்கதான் ‘தமிழுணர்வை’ காசாக்குறானுங்கன்னு பார்த்தா, சமூக அக்கரைன்னா தேங்காயா, மாங்க்யான்னு கேக்கற இந்த நாதாரிங்களும் யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டானுங்க. ராஜபட்சே காலை நக்கின இவனுங்களை எப்படி பாஸ் சும்மா விடுறது?

கொதிக்கிற கோபத்தை அடக்கிட்டுதான் முதல்ல வச்ச தலைப்பயே மாத்தினேன். “கோபத்தில் இருக்கும்போது முடிவெடுக்காதே”ன்னு புத்தரே சொல்லியிருக்கார். அதனாலதான் கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்கேன்.

மற்றபடி, படிப்பவர்களை எரிச்சலூட்டும் தொனி எங்காவது
தெரிந்தால், தயவு செய்து சுட்டிக் காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன்.

Unknown said...

இப்படி ஓவராய் பில்ட் அப் பண்ணும்போதே தெரியும். ஊத்திக்கபோதுண்ணு. இப்ப சரியாய்ப் போச்சு.

Anonymous said...

இட ஒதுக்கீட்டை கேவலமாக இந்த படத்தில் விமர்சித்துள்ள முட்டாளின் வசனங்கள் நகைப்புக்குரியது,கண்டிக்கத்தக்கது.

thamizhparavai said...

நல்ல சூடு கொடுத்திருக்கிறீர்கள்... புதசெவி பஸ் பார்த்து இங்கு வந்தேன்.
இயக்குனர் ரிசர்வேஷன் கோட்டால இடங்கிடைச்சும், விட்டுட்டு ஜெனரல்ல படிச்சிருப்பாரு போல. அண்ணன் சூரியாவும் அப்டித்தான் போல...

திங்கள் சத்யா said...

ஆதரவுக்கு நன்றி ashokha, Anonymous, தமிழ்ப்பறவை.

வலையுகம் said...

பகிர்வுக்கு
நன்றி

திங்கள் சத்யா said...

இந்த தளத்தில் பின்னூட்டம் இடுவதில் ஒரு பிழை இருக்கிறது. அது குறித்த சிறு விளக்கம்:

முதலில் உங்கள் கருத்தை பின்னூட்டப் பெட்டியில் போடுங்கள். அப்படியே அதை copy எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு, Comment as: பகுதியில் anonymous, name/url உள்ளிட்ட ஏதாவது ஒன்றை தெரிவு செய்யுங்கள். இப்போது post comment கொடுங்கள்.

இப்போது, கமெண்ட் பப்ளிஷ் ஆவதற்கு பதில் இன்னொரு விண்டோ, குட்டியான கமெண்ட் பாக்ஸாக வரும். அதிலே உங்கள் கருத்தை paste செய்யுங்கள். சிரமத்திற்கு மன்னியுங்கள். நன்றி.