Saturday, November 18, 2006

புடுச்சேரி என்கிற டுபுக்குச்சேரி!


சரக்குக்கு பேர் போன பாண்டிச்சேரி'யோட பேரை புதுச்சேரி என்று மாற்றி அமைக்க வேண்டும் என்று தமிழ் அறிஞர்கள் உட்பட பல்வேரு தரப்பினர் நீண்ட நெடுங்காலமாகவே போராடி வந்தனர்.


புதுச்சேரி பிரஞ்சு காலனி ஆதிக்கத்திற்கு உள்ளான போது பிரஞ்சியர்களின் எழுத்துப் பிழையால் புதுச்சேரியில் உள்ள ''U'' என்பது ''N'' ஆக மாறி பாண்டிச்சேரி ஆகிவிட்டது.


இந்த குறையை மாற்ற வேண்டி சட்ட மன்றத்தில் தீர்மானமும் போட்டு, அதுவும் மத்திய அரசு ஒப்புதலோடு புதுச்சேரி ஆனது. ஆனா பாருங்க மெத்தப் படிச்ச அதிகாரிங்களோட இங்கிலிசு நாலெட்ஜை.


PUDHUCHERRY என்பதற்கு பதில் PUDUCHERRY [புடுச்சேரி] என்று எழுதியிருக்கிறார்கள். இதுக்காடா இவ்ளோ கஷ்ட்டப்பட்டீங்க?


வெளியூர்காரன் இன்னைக்கி புடுச்சேரி'ன்னு படிப்பான். நாளைக்கு புடுச்சேரி, புடுக்குச்சேரி'ன்னு ஆவும், இல்ல டுபுக்குச்சேரி'ன்னும் ஆவும். ஆனா கண்டிப்பா புதுச்சேரி ஆகாது

1 comment:

Anonymous said...

பாலா, உங்கள் பதிவினை நீங்கள் ஏன் www.thamizmanam.com - ல் இணைக்கக்கூடாது, இணைத்தால் நிறையப்பேரினை சென்றடையுமே !!
Came from your Flickr page.